search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    பவர்பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது என்ற கடும் விமர்சனத்திற்கு இன்றைய வங்காள தேச போட்டியில் பதிலடி கொடுத்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, தவான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும் பும்ரா, ஷமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சாலும் தோல்வியை சந்திக்காத அணியாக இருந்தது.

    ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அந்த பெருமையை இழந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் பவர்பிளேயான முதல் 10 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. இது இந்திய அணியின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை எழுப்பியது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 41 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 53 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களும் எடுத்திருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. 6 போட்டியில் ஓவருக்கு சராசரியாக 4 ரன்களே எடுத்திருந்தது.

    ரோகித் சர்மா லோகேஷ் ராகுல்

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தனர். தொடக்க ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
    2007 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக், தற்போதுதான் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். 34 வயதாகும் இவர் கடந்த 2004-ல் இந்திய அணியில் அறிமுகமானார். ஆனால், டோனி வருகையாலும் மோசமான பார்ம் காரணத்தாலும் அணியில் அவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

    இதனால் 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 91 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

    தினேஷ் கார்த்திக்

    அதன்பின் 2011 மற்றும் 2015 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிக்கவில்லை. தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இன்று வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். இதனால் 12 வருடங்கள் கழித்து அணியில் அறிமுகமாகியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிஙகை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ்க்கு பதிலாக புவனேஷ் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.
    இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரத்னே 32 ரன்களும், பெரேரா 64 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

    அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 103 பந்தில் 104 ரன்கள் குவித்ததார். திரிமானே ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ரன்கள் விளாச இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது. குசால் மெண்டிஸ் 39 ரன்களும், மேத்யூஸ் 26 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கிறது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், சுனில் அம்பரீஷ்சும் ஆடினர். அம்பரீஷ் 5 ரன்னிலும், கெயில் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

    அடுத்து வந்த ஹோப்  (5) ஹெட்மேயர் (29) ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். பின்னர் களம் வந்த நிக்கோலஸ் பூரானும், ஆலனும் ஜோடி சேர்ந்து  அதிரடியாக ஆடிய ரன் சேர்த்தனர். ஆலன் 51 ரன் அடித்திருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். பூரான் களத்தில் இருக்கும்வரை வெஸ்ட் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. பூரான் 118 ரன் அடித்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கிய ரிஷப் பந்த் இந்திய ஆடும் லெவன் அணியில் நீடிப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பந்த் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டார். ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கியதற்காக இந்திய அணி நிர்வாகம் மீது விமர்சனம் எழும்பியது. 29 பந்தில் 32 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த், அதிரடியாக விளையாட முயற்சிக்கும்போது ஆட்டமிழந்தார்.

    இடது கை பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த், தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘ஷிகர் தவான் காயத்தால் வெளியேறிய பின், அணி நிர்வாகம் இடது கை பேட்ஸ்மேன் இல்லையே என்று எண்ணியது. வலது - இடது கம்பினேசனால் பந்து வீச்சாளர்களை அப்செட் ஆக்குவதற்கான தந்திரம்தான் அது. அடில் ரஷித் அதிகமான ஓவர்கள் வீசவில்லை.

    ரிஷப் பந்த் ஓரளவிற்கு சிறப்பாகவே பேட்டிங் செய்தார். சிறந்த வகையிலான ஒன்றிரண்டு ஷாட்ஸ் ஆடினார். ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ஆகவே, நாங்கள் அடுத்த போட்டியிலும் ரிஷப் பந்துக்கு ஆதரவாக இருப்போம்.

    ரிஷப் பந்த்

    அவர்கள் எங்களுடன் அணியுடன் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் ஒருவர். அவர் தற்போதுதான் அணியில் சேர்ந்தவர் இல்லை. எங்களுடன் இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் செலவழித்து வருகிறார். சர்வதேச லெவல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அசத்தி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் அவருக்கு சற்று புதிது.

    மிடில் ஆர்டர் மற்றும் வலது - இடது கை காம்பினேசன் குறித்து அவருக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவரால் அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்க முடியும்’’ என்றார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.
    இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரத்னே 32 ரன்களும், பெரேரா 64 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

    அரைசதம் அடித்த குசால் பெரேரா

    அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 103 பந்தில் 104 ரன்கள் குவித்ததார். திரிமானே ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ரன்கள் விளாச இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது. குசால் மெண்டிஸ் 39 ரன்களும், மேத்யூஸ் 26 ரன்களும் சேர்த்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும் காட்ரெல், தாமஸ், ஆலன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    விஜய் சங்கரின் கால் விரலில் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்திருந்தார். வலைப்பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து கால் விரலை தாக்கியது. காயம் சரியாகாததால் விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்தை எப்படியும் இந்தியா வீழ்த்தி, தங்களது அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதங்கம்.
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. இதனால் போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

    தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா இருந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படியும் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பினர். ஆனால் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் ஆதங்கம் அடைந்த அவர்கள் இந்தியா - இங்கிலாந்து இடையிலான போட்டியில் மேட்ச்-பிக்சிங் நடந்துள்ளது என தங்களாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, மூன்று ஆட்டங்களில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால், சச்சின் தெண்டுல்கரின் பாராட்டை பெற்றுள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு, புவனேஷ்வர் குமார் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை கிடைத்தது.

    தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட்டும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நான்கு விக்கெட்டும், நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்களும் கைப்பற்றினார். மூன்று போட்டியில் 13 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார்.

    சிறப்பாக பந்து வீசி வரும் ஷமியை சச்சின் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    முகமது ஷமியின் பந்து வீச்சு குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடந்த மூன்று போட்டிகளில் முகமது ஷமியின் பந்து வீச்சை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் ஸ்பெல்லை பார்க்க அபாரமாக இருந்தது. குறிப்பாக சீம் பொஷிசனில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார். வரும் போட்டிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்ததால் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தோல்வியடைய லீக் ஆட்டம் சூடுபிடித்தது. இங்கிலாந்து கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்து. இங்கிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இருந்தது. இதனால் இங்கிலாந்து தோல்வியடைய வேண்டும் என்று ஆசிய கண்ட ரசிகர்கள் விரும்பினர்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

    நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தினால் இங்கிலாந்து நிலை பரிதாபத்திற்குள்ளாகும் என்ற நிலை இருந்தது. ஆனால்  இந்தியாவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 8-ல் ஐந்து வெற்றியின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்தின் வெற்றி பாகிஸ்தான், வங்காள தேச அணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் 8-ல் நான்கு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றின் மூலம் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்காள தேசம் 7-ல் தலா மூன்று வெற்றி தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 7 புள்ளிகள் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டிதான் உள்ளது. இதில் வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமிக முக்கியமானது. பாகிஸ்தான் வங்காள தேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் ரன்ரேட் பார்க்கப்படும்.  ஒருவேளை நியூசிலாந்து தோல்வியடைந்து, பாகிஸ்தான் வங்காள தேசத்தை வீழ்த்தினால் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் ரன்ரேட் பார்க்கப்படும்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி

    வங்காள தேசத்திற்கு இரண்டு போட்டிகள் உள்ளன. நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை வீழ்த்தி, பாகிஸ்தானையும் வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் போட்டியில். இந்தியாவுக்கு எதிராக வங்காள தேசம் வெற்றி பெற்றால், இந்தியா கட்டாயம் இலங்கையை வீழ்த்த வேண்டும். ஒருவேளை இந்தியா இலங்கையிடமும் தோல்வியடைந்தால் இந்தியாவும் ரன்ரேட்  அடிப்படையில்தான் அரையுறுதிக்கு முன்னேற முடியும்.

    இதனால் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காள தேச அணிகள் அரையிறுதி வாய்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன.
    செஸ்டர்-லீ-ஸ்டிரிட்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக களம் காண்கின்றன.

    இவ்விரு அணிகளும் உலக கோப்பை கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 2-ல் இலங்கையும், 4-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
    பர்மிங்காம்: 

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்கள்களாக களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். ஜாசன் ராய் 66 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109  பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். 
    அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் 1 ரன்னில், ஜோ ரூட் 44 ரன்னிலும்,ஜோஸ் பட்லர் 20 ரன்னிலும்,வோக்ஸ் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது. 

    இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (0) ரன் எதுவும் எடுக்காம் அவுட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விராட் கோலி 66 ரன்களில் பிளங்கெட் பந்து வீச்சில் அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 102 ரன்கள் எடுத்திருந்தபோது  கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சின் போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 32 ரன்களில் வெளியேறினார்.

    பின்னர் டோனியுடன் ஜோடி சேர்ந்த ஷர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஷர்திக் பாண்ட்யா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி 42 ரன்களுடனும் கேதர் ஜாதவ் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனால் இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணியின் பிளங்கெட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    ×