search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
    பர்மிங்காம்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்கள்களாக களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 160-ஐ எட்டியபோது ஜாசன் ராய் 66 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109  பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் 1 ரன்னில், ஜோ ரூட் 44 ரன்னிலும்,ஜோஸ் பட்லர் 20 ரன்னிலும்,வோக்ஸ் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.  அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.   

    பென் ஸ்டோக்ஸ்
     

    இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 338 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    பர்மிங்காம்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.  இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன்  டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் பேட்டிங் தேர்வு செய்தார்.  

    இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் , ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ்,  அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ராஆர்ச்சர், பிளங்கெட்,மார்க் வுட்.
    உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
    லீட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் 10 ஓவர் வீசி 51 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் டிரென்ட் போல்டையும் சேர்த்து 11 ஹாட்ரிக் விக்கெட் சாதனை பதிவாகியுள்ளது.

    கடைசி ஓவரில் போல்ட் அடுத்தடுத்து 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3-வது பந்தில் உஸ்மான் கவாஜா, 4- வது பந்தில் மிட்செல் ஸ்டார்க், 5-வது பந்தில் பெஹ்ரண்டாப் ஆகியோரையும் அவர் ‘அவுட்’ செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டிரென்ட் போல்ட் பெற்றார். 

    டிரென்ட் போல்ட்

    உலகக்கோப்பையில் 11-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் வருமாறு:-

    சேட்டன் சர்மா (இந்தியா)- நியூசிலாந்து- 1987
    சக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்) ஜிம்பாப்வே 1999
    சமிந்தா வாஸ் (இலங்கை) வங்காளதேசம் 2003
    பிரெட் லீ (ஆஸ்திரேலியா) தென்ஆப்பிரிக்கா 2003
    மலிங்கா    (இலங்கை) தென்ஆப்பிரிக்கா 2007
    கேமர் ரோச் (வெஸ்ட் இண்டீஸ்) நெதர்லாந்து 2011
    மலிங்கா    (இலங்கை) கென்யா 2011
    ஸ்டீவ்பின் (இங்கிலாந்து) ஆஸ்திரேலியா 2015
    டுமினி (தென்ஆப்பிரிக்கா) இலங்கை 2015
    முகமது ஷமி (இந்தியா) ஆப்கானிஸ்தான் 2019
    டிரெண்ட் போல்ட்(நியூசிலாந்து) ஆஸ்திரேலியா 2019
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
    லார்ட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லார்ட்சில்  37-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும்  களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 15 ரன்களை கடந்த போது கேப்டன் பின்ச் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த வீரர்களை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.

    ஆஸ்திரேலியா 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அலெக்ஸ் கேரி 71 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில்  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 243 ரன்கள் எடுத்தது. 

    பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் குப்தில் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஹென்றி நிகோலஸ் 8(20) ரன்களும், மார்டின் குப்தில் 20(43) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 40(51) ரன்களும், அவரைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 30(54) ரன்களும், கிராண்ட் ஹோம் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டாம் லாதம் 14(28) ரன்களும், ஜேம்ஸ் நீசம் 9(22) ரன்களும், சோதி 5(4) ரன்னும், பர்குசன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சாண்ட்னர் 12(29) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.  

    இறுதியில் டிரண்ட் போல்ட் 2(7) ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் நியூசிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், ஜேசன் பெஹண்ட்ரோப் 2 விக்கெட்டுகளும், லயான், கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. 
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    லீட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்தீன் நயீப் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமத் ஷா, குல்பதீன் நயீப் களமிறங்கினர். நயீப் 15 ரன்னிலும், ஹஸ்மதுல்லா ஷஹிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ரஹமத் ஷா 35 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அஸ்கர் ஆப்கன் 42 ரன்னிலும், நஜ்புல்லா சட்ரன் 42 ரன்னிலும் வெளியேறினர். 

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்துது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹிப் அப்ரிதி 4 விக்கெட்டும், இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர் பாக்கர் சமான் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பாபர் ஆசாம் 45 ரன்கள் அடித்தார். 

    இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டியது. அந்த அணியின் இமாத் வாசிம் 49 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 244 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா.
    லார்ட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லார்ட்சில் நடைபெறும் 37-வது லீக் ஆட்டம் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும்  களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 15 ரன்களை கடந்த போது கேப்டன் பின்ச் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த வீரர்களை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.

    ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய நியூசிலாந்து வீரர்கள்

    ஆஸ்திரேலியா 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அலெக்ஸ் கேரி 71 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில்,  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 243 ரன்கள் எடுத்தது. போல்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டும், பெர்குசன், நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
    லீட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின.டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயீப் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமத் ஷா, குல்பதின் நயீப் களமிறங்கினர்.

    நயீப் 15 ரன்னிலும், ஹஸ்மதுல்லா ஷஹிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ரஹமத் ஷா 35 ரன்னில் அவுட்டானார்.

    விக்கெட் வீழ்த்திய வஹாபை பாராட்டும் சக வீரர்கள்

    ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அஸ்கர் ஆப்கன் 42 ரன்னிலும், நஜ்புல்லா சட்ரன் 42 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் ரன்கள் எடுக்கவில்லை.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹிப் அப்ரிதி 4 விக்கெட்டும், இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    லார்ட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லார்ட்சில் நடைபெறும் 37-வது லீக் ஆட்டம் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்று டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    லீட்ஸ்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெறும் 36-வது லீக் ஆட்டம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயீப் டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தார்.  இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 2 சிக்சர் உள்பட 16 ரன்கள் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி மந்தமாக ஆடியதை விமர்சித்த முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி அரைசதம் (56 ரன், 61 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து ஆடிய விதத்தை பாராட்டியுள்ளார்.

    தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி- ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இல்லாவிட்டால் இந்திய அணியால் 268 ரன்களை எட்டியிருக்க முடியாது. அதிலும் கடைசி ஓவரில் டோனி 2 சிக்சர் உள்பட 16 ரன்கள் விளாசியதை மறந்து விடக்கூடாது. அவரே 6 பந்துகளையும் எதிர்கொண்டு வலுவாக முடித்து வைத்தது சிறப்பானது’ என்று கூறியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டு பிளசிஸ், ஆம்லாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
    செஸ்டர் லி ஸ்ட்ரீட்:

    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ்  பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்திலேயே கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேரா உடன் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    பெர்னாண்டோ 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 23 ரன்களும், மேத்யூஸ் 11 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 24 ரன்களும், ஜீவன் மெண்டிஸ் 18 ரன்களும், திசாரா பேரேரா 21 ரன்களும் அடிக்க இலங்கை 49.3 ஓவரில் 203 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ் தலா 3 விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. 

    தொடக்க வீரர்கள் அம்லா மற்றும் குயின்டான் டி காக் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குயின்டான் டி காக் 15 ரன்களில் மலிங்கா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    சிறப்பாக ஆடி அரை சத்மடித்த டு பிளசிஸ்

    அவரை தொடர்ந்து அம்லாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டார். இதனால் அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இரு வீரர்களும் சிறப்பாக ஆடி அரைசதம் அடிந்தனர். 

    இறுதி வரை ஆட்டம் இழக்காமல் கேப்டன்  பாப் டு பிளிஸ்சிஸ் 96  ரன்களுடனும் அம்லா 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 37.2 ஒவர்களில் 204 ரன்கள் என்ற இலக்கை அடைந்து வென்றது. இதன்மூலம் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

    தென்ஆப்பிரிக்கா அணி உடனான தோல்வியால், உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் இலங்கை அணியின் கனவு தகர்ந்தது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.  
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது தேனீக்கள் மைதானத்தில் படையெடுத்ததால் வீரர்கள் தரையில் படுத்து தப்பினார்கள்.
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 48-வது ஓவரின்போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படையெடுத்தது.

    தேனீக்கள் பிட்ச் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது. தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.

    ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×