search icon
என் மலர்tooltip icon

    அசாம்

    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அங்கிதா தத்தா கட்சியை விட்டு நீக்கப்பட்டார்
    • அங்கிதா தத்தா இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.

    கவுகாத்தி:

    அசாம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் அங்கிதா தத்தா. இவர் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவரான பி.வி.சீனிவாசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். தான் அவமானத்துக்கு ஆளாவதாகவும், பாலின பாகுபாடு ஏவப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதனை அசாம் பா.ஜ.க. முதல் மந்திரியான ஹிமந்த் பிஸ்வா சர்மா வரவேற்றிருந்தார்.

    இதற்கிடையே, இதுதொடர்பாக அங்கிதா தத்தாவிடம் மாநில காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டது. அவரது விளக்கம் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அங்கிதா தத்தாவை 6 ஆண்டுகளுக்கு நீக்கி காங்கிரஸ் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அங்கிதா தத்தா இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியானது.

    இவருடன் காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ. பிஸ்மிதா கோகோயும் பா.ஜ.க.வில் இணைகிறார்.

    • அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அம்மாநில அரசு தடங்கல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு.
    • மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடைசி நாளாக நடைபயணம் மேற்கொள்கிறார்.

    நேற்று முன்தினம் கவுகாத்தியில் நுழைவதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தடைவிதித்திருந்தார். அதையும் மீறி ராகுல் காந்தி கவுகாத்தியில் நுழைய முயன்றார். இதனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவின்பேரில் போலீசார் ராகுல் காந்தி மீது மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். நேற்றைய நடைபயணத்தின்போது, என் மீது இன்னும் அதிகமாக வழக்குகள் போட முடியும். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பகிரங்கமாக மிரட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவிக்கையில் "நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள குறித்து விசாரணை நடத்தும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கவுகாத்தில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. தற்போது அசாமில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், நேற்று ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று அசாமின் பார்பேட்டா பகுதியில் நடைபயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரையின் போது அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ராகுல்காந்தி கூறியதாவது, "உங்கள் முதல்வர் ஒவ்வொரு நாளும் பயத்தையும் வெறுப்பையும் பரப்புகிறார். அசாமில் வெறுப்பும் பயமும் பரப்ப படும் போதெல்லாம் உங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றனர். நாட்டின் ஊழல் மிகுந்த முதல்வராக ஹேமந்த பிஸ்வா சர்மா திகழ்கிறார்.

    நீங்கள் எப்போது தொலைக்காட்சியை பார்த்தாலும் அதில் ஹேமந்த பிஸ்வா தான் தோன்றுவார். ஊடகங்கள் உங்களிடம் சொல்லும் அனைத்தும் உங்கள் முதல்வரால் அவர்களுக்கு சொல்லப்பட்டவையே. அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன. அவர் அமித் ஷாவுக்கு எதிராக எதாவது பேசினால் அடுத்த நிமிடம் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்" என விமர்சித்து கூறியுள்ளார்.

    • கவுகாத்தியில் நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநில அரசு தடை.
    • தடையை மீற நடைபயணம் மேற்கொள்ள முயன்றதால் தடுத்தி நிறுத்தம். வழக்குப்பதிவு.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கவுகாத்தியில் நுழைய அம்மாநில அரசு தடைவிதித்த நிலையில், ராகுல் காந்தி நடைபயணம் கவுகாத்தியில் நுழைய முயன்றது. அப்போது போலீசார் நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதன்பின் மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று அவர் பார்பெட்டா மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வழக்குகள் பதிவு செய்து என்னை மிரட்ட முடியும் என்ற யோசனை ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு எப்படி தோன்றியது என எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்மீது பல வழக்குகள் பதிவு செய்ய முடியும். 25-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யுங்கள். ஆனால், என்னை மிரட்ட முடியாது. பிஜேபி- ஆர்எஸ்ஸ் ஆகியவற்றால் என்னை மிரட்ட முடியாது.

    பா.ஜனதா- ஆர்.எஸ்.எஸ். மொழி, கலாச்சாரம், அசாமின் வரலாற்றை அழிக்க விரும்புகிறது. நாக்பூரில் இருந்து அசாமை வழிநடத்த விரும்புகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அசாமில் இருந்து மட்டுமே அசாம் இயக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • 500 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நேற்று) ராமரை பற்றி பேச நல்ல நாள்.
    • ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா? என்றார் அசாம் முதல்வர்.

    ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநிலத்தில் பல்வேறு தடங்கல் ஏற்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாதான் காரணம் எனவும் விமர்சனம் செய்துள்ளது. தடங்கல் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை அசாமில் உள்ள கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். நான் என்ன குற்றம் செய்தேன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

    ராகுல் காந்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா, "ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா?. 500 ஆண்டுகள் கழித்து ராமரை பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ராவணனை பற்றி பேச வேண்டாம்" என்றார்.

    நடைபயணம் தொடர்பாக காங்கிரஸ்க்கும், ஹிமாந்தா பிஸ்வா சர்மவுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது ராகுல் காந்தியை ராவணன் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா மறைமுக தாக்கியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு.
    • அசாம் மாநிலத்தில் ஏற்கனவே ராகுல் நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

    அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 25-ந்தேதி வரை அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசாம் துறவியும், அறிஞருமான ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் அமைந்துள்ள படத்ராவா சத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்தி இன்று காலை சென்றார்.

    அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், "நாங்கள் கோவிலில் தரிசனம் செய்ய சென்றோம். என்னால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன்?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், "நாங்கள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. எளிமையான முறையில் பிரார்த்தனை செய்ய விரும்பினோம்" என்றார். அதனைத் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் காந்தி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா "ராகுல் காந்தி இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு பக்கம் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை, மறுபக்கம் ராகுல் காந்தி ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் சாமி தரிசனம் என்பது மோதலை ஏற்படுத்தும். இது அசாமிற்கு நல்லதல்ல" எனக் கூறியிருந்தார்.

    கோவில் நிர்வாகம் மதியம் 2 மணிக்கு முன்னதாக சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என கேட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக, அம்மாநில முதல்வர் மீது காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இது தொடர்பாக போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • வருகிற 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபாதை மேற்கொண்டு வருகிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜனதா தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

    உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

    இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி "அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும், இந்துஸ்தான் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடைபயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது அசாம் மாநிலத்தில் நடைபயணம் செய்து வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு அனுமதி வழங்க, பா.ஜனதா மாநில அரசு மறுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த நிலையில் மக்களை நடைபயணத்தில் பங்கேற்கக் கூடாது என அசாம் மாநில அரசு மிரட்டுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலம் பிஸ்வாநாத் சாரியாலியில் நடைபெற்ற நடைபயணத்தின்போது மக்களிடையே ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த பாத யாத்திரை பயணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மக்களை அசாம் மாநில அரசு மிரட்டுகிறது. ஆனால், மக்கள் பா.ஜனதாவுக்கு பயப்படவில்லை.

    இந்த நடைபயணத்தின்போது நாங்கள் நீண்ட நேரம் பேசுவதில்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் 7 முதல் 8 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிரதிநிதிகளுடன் பேச வேண்டியுள்ளது. மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை கேட்க வேண்டியுள்ளது. பின்னர், உங்களுடைய பிரச்சனைக்காக போராட வேண்டியுள்ளது. இதுதான் இந்த நடைபயணத்தின் இலக்கு.

    தேர்தல் வரும்போது பா.ஜனதாவை காங்கிரஸ் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கும். மிரட்டல் இருந்த போதிலும் முன்னோக்கி சென்று மக்களுக்காக போராட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றார்.
    • தற்போது அமித் ஷா கட்டளையின்படி அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்.

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

    தற்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரான பத்ருதீன் அஜ்மல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்கள் வாக்குகளை பெற்ற ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தற்போது அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது:-

    டாக்டர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றீர்கள். தற்போது அமித் ஷாவின் கட்டளைக்கு இணங்க முஸ்லீம்களுக்கு எதிராக அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    முஸ்லீம் சமூகம் சர்மாவுக்கு பெரும் வாக்கு வங்கியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பாக அவர் அதை இழக்கக் கூடாது. இருண்டு வருடம் காத்திருங்கள், ஹிமாந்தா மற்றும் யோகி ஆகிய நாத் ஆகிய இருவரும் பிரதமர் மந்திரிக்கான போட்டியில் இருப்பார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • மியான்மரில் ராணுவத்திற்கும் இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
    • இதனால் தஞ்சம் கேட்டு பலர் அசாம் மாநிலத்திற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அசாம் மாநிலம் சென்றுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அசாம் போலீஸ் கமாண்டோ பட்டாலியனின் முதல் பிரிவின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அணிவகுப்பை உள்துறை மந்திரி அமித் ஷா ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா- மியான்மர் எல்லை வங்காளதேசம் எல்லை போன்று பாதுகாக்கப்படும். மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு எளிதாக நுழைவதை (எந்தவித விசா போன்று நடைமுறை பின்பற்றமாமல் இந்தியாவுக்கு வரும் அனுமதி) இந்திய அரசு தடுத்து நிறுத்தும்.

    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியின் அரசு வேலைக்கு மக்கள் லஞ்சம் வழங்க வேண்டியிருந்தது. ஆனால், பா.ஜனதா ஆட்சியில் ஒரு பைசா கூட வழங்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

    550 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோவில், ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையான விசயம்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபயணத்தின்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்.
    • பதிலடியாக ஹிமாந்தா சர்மா சோனியா காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் செய்து வருகிறார்.

    நடைபயணத்தின்போது அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வர் என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை ராகுல் காந்தி குறிப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிக ஊழல் செய்ய முடியுமா? என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில், "காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்திலிருந்து வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் நான் ஒரு வரமாகவே கருதுகிறேன். ஏனென்றால், மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலை இது எனக்கு அளிக்கிறது.

    ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிகமாக ஊழல் செய்ய முடியுமா?. போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் கியாஸ் துயரச் சம்பவம், ஆண்டர்சன் தப்பித்தல், 2ஜி ஊழல், சுரங்க ஊழல். இன்னும் ஏராளம் (பட்டியல் நீளம். சென்று கொண்டே இருக்கும்)" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஊழலில் ஈடுபடுவது எப்படி? என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவால் பாடம் எடுக்க முடியும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசாம் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி வரை 17 மாவட்டங்களில் 833 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.

    ×