search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
    • மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

    பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை  திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    இதனை அடுத்து, தமிழக அரசின் வாதத்தை ஏற்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரது  தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது. 

    • வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன்.
    • பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    'மேக் இன் இந்தியா' திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. 10-வது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், திறன்களை உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:-

    மேக் இன் இந்தியா இன்று 10 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இதை வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் நாட்டின் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குகிறது.

    பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தது சர்ச்சையானது.
    • ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளருக்கும், குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.

    இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது. இரு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது

     

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

    அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, நீதித்துறை நடவடிக்கைகளின்போது, பெண் வெறுப்பு அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் பாதகமானதாகக் கருதப்படும் கருத்துக்களை வெளியிடாமல் கோர்ட்டுகள் கவனமாக இருக்கவேண்டும்.

    நாட்டில் உள்ள பெரும்பாலான கோர்ட்டுகள் தற்போது வழக்கு விசாரணையை நேரலை செய்து வருகின்றன. இந்த நேரலை என்பது மக்கள் மத்தியில் நேரடியாக செல்பவை என்பதை நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறையினர் மனதில் கொள்ள வேண்டும்.

    எனவே எந்தக் கருத்தையும் கூறுவதற்கு முன் இதனை மனதில் வைத்திருக்க வேண்டும். நீதிபதியின் இதயம், மனசாட்சியும் பார பட்சமற்றதாக இருந்தால் மட்டுமே நீதியை வழங்கமுடியும். நீதித்துறையில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே அரசியலமைப்பில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    நீதித்துறையின் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்கவேண்டாம். இது தேச

    ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.

    நீதி என்பது சூரிய ஒளி போன்று பிரகாசமானது. அது மேலும் பிரகாசமானதாக இருக்கவேண்டும். அதனடிப்படையில் கோர்ட்டில் நடப்பதையும் வெளிச்சத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர, மூடி மறைக்கக் கூடாது என்பதே ஆகும் என்றார்.

    மேலும், தான் தெரிவித்த கருத்துக்களுக்காக கர்நாடக நீதிபதி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதால் இவ்வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளே கோரிக்கை வைக்க வேண்டும்- கங்கனா.
    • விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.

    விவசாய சட்டங்கள் குறித்து நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கூறிய கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தில் இருந்து பா.ஜ.க. விலகி நிற்கிறது என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்திருந்தார்.

    அதற்கு கங்கனா ரனாவத் "நிச்சயமாக, விவசாயிகள் சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் அவை அந்த மசோதாக்கள் மீதான கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனது கருத்து வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நடித்துள்ள எமர்ஜென்சி படம் வெளியே வர முடியாமல் இருக்கிறது.

    விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதை விமர்சித்து பேசினார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தினர். சில தினங்களுக்கு முன் சோனியா காந்தி குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் விவசாய சட்டங்கள் குறித்து பேசியுள்ளார். விவசாய சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரனாவத் கூறுகையில் "இது சர்ச்சையாகும் என்பது எனக்குத் தெரியும்... இருந்தபோதிலும் திரும்பப் பெறப்பட்ட விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.

    விவசாயிகளே இதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும். தேசிய வளர்ச்சியின் வலிமைக்கான தூண் அவர்கள். உங்களுடைய சொந்த நலனுக்கான சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என நான் உங்களுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்" இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் கருத்தில் இருந்து விலகியிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இது தொடர்பாக கூறுகையில் "விவசாயிகள் சட்டங்கள் குறித்து பேசியது கங்கனா ரனாவத்தின் தனிப்பட்ட கருத்தாகும். பா.ஜ.க. சார்பில் இதுபோன்ற கருத்துகள் கூறுவதற்காக அங்கீகரிக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் "நிச்சயமாக, விவசாயிகள் சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் அவை அந்த மசோதாக்கள் மீதான கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

    கங்கனா ரனாவத்தின் இந்த கருத்து பெரும்பாலானோருக்கு ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் வருத்தம் தெரிவித்து கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டுள்ளார். இநத வீடியோவில் "நான் வெறும் நடிகை மட்டுமல்ல. நான் பா.ஜ.க. உறுப்பினரும் கூட என்றுதான் என்னுடைய மனதில் கொண்டுள்ளேன். என்னுடைய கருத்து தனிப்பட்ட கருத்தாக இருக்கக் கூடாது. அது கட்சியின் நிலையாக இருக்க வேண்டும். என்னுடைய கருத்துகள் யாருக்கவாது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தால், நான் அதை திரும்பப் பெறுகிறேன். வருத்தம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி தவறாகப் பயன்படுத்துகிறார்.
    • அவரது கருத்துக்கள் தேச விரோத செயலாகும்.

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அவர் பல்கலை மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    வேலையில்லா திண்டாட்டம், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறினார். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசுவதா? என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் அவதூறாக பேசியது தொடர்பாக ராகுல்காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பா.ஜ.க. எம்.பி. சி.பி.ஜோஷி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி தவறாகப் பயன்படுத்துகிறார். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் அவர் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல்காந்தி கூறுவதால் நாட்டின் சர்வதேச உறவுகள் பாதிக்கும்.

    அவரது கருத்துக்கள் தேச விரோத செயலாகும். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுல்காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளே கோரிக்கை வைக்க வேண்டும்- கங்கனா.
    • விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா ரனாவத் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நடித்துள்ள எமர்ஜென்சி படம் வெளியே வர முடியாமல் இருக்கிறது.

    விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதை விமர்சித்து பேசினார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தினர். சில தினங்களுக்கு முன் சோனியா காந்தி குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் விவசாய சட்டங்கள் குறித்து பேசியுள்ளார். விவசாய சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரனாவத் கூறுகையில் "இது சர்ச்சையாகும் என்பது எனக்குத் தெரியும்... இருந்தபோதிலும் திரும்பப் பெறப்பட்ட விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.

    விவசாயிகளே இதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும். தேசிய வளர்ச்சியின் வலிமைக்கான தூண் அவர்கள். உங்களுடைய சொந்த நலனுக்கான சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என நான் உங்களுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்" இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் கருத்தில் இருந்து விலகியிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இது தொடர்பாக கூறுகையில் "விவசாயிகள் சட்டங்கள் குறித்து பேசியது கங்கனா ரனாவத்தின் தனிப்பட்ட கருத்தாகும். பா.ஜ.க. சார்பில் இதுபோன்ற கருத்துகள் கூறுவதற்காக அங்கீகரிக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் "நிச்சயமாக, விவசாயிகள் சட்டங்கள் குறித்த எனது கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் அவை அந்த மசோதாக்கள் மீதான கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தது.
    • தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனஅமைதியின்றி இருப்பதாக மனுதாரரின் வக்கீல் பூல்கா வாதிட்டார்.

    புதுடெல்லி:

    பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 2021-ம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அந்த நெறிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

    இதற்கிடையே, 'பச்பன் பச்சோவா அந்தோலன்' என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே வெளியிட்டு இருப்பதாக கூறியிருந்தது.

    இந்த மனு, நீதிபதிகள் நாகரத்னா, கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாதுகாப்பு இல்லாததால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனஅமைதியின்றி இருப்பதாக மனுதாரரின் வக்கீல் பூல்கா வாதிட்டார்.

    அதையடுத்து, பள்ளி பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • ரகசிய கேமரா பொருத்தியதாக வீட்டு உரிமையாளர் மகன் கைது.
    • வீட்டில் இருந்த கனெக்டெட் சாதனங்களைச் சரிபார்த்துள்ளார்.

    டெல்லி ஷகர்பூர் பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண் ஒருவரின் படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அந்தப் பெண் டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கரண் அந்த பெண் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன். தான் வசித்து வந்த வீட்டு சாதனங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கேமராக்களை அந்த பெண் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணை செய்த காவல் துறையினர் வீட்டு உரிமையாளர் மகன் கரணை கைது செய்தனர்.

    யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண், தனது வாட்ஸ்அப் கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டு சந்தேகமடைந்தார். இதைத் தொடர்ந்து தன் வீட்டில் இருந்த கனெக்டெட் சாதனங்களைச் சரிபார்த்துள்ளார்.

    அப்போது, அறியப்படாத லேப்டாப்பில் இருந்து அவளது கணக்கு பயன்படுத்தப்பட்டதைக் கண்டாள். இது அவளது குடியிருப்பைத் தேடத் தூண்டியது, அவளது குளியலறையின் பல்ப் ஹோல்டருக்குள் ஸ்பை கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டார். அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினார்கள். சோதனையின் போது, அவரது படுக்கையறையின் பல்ப் ஹோல்டரிலும் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, கேமராக்களை பொருத்தியதை கரண் ஒப்புக்கொண்டார். மேலும் கரண் வசமிருந்த ஒரு ஸ்பை கேமரா மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அடங்கிய இரண்டு லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினர்.

    • சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
    • போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர்.

    டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் 16 வயது சிறுவன், புதிய போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்கவில்லை என்று கூறி சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாலை சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சச்சின் மறுத்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சச்சினை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். பின்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், 16 வயது உள்ள 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

    • கடந்த சனிக்கிழமை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விளக்கம் அளிக்க மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ்.

    திருப்பதி லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்திருப்பதாக உறுதியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.டைரி நிறுவனத்தில், கடந்த சனிக்கிழமை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் முதல்வர் நாற்காலியில் அதிஷி அமர்ந்துள்ளார். பக்கத்தில் இன்னொரு காலி நாற்காலி போடப்பட்டுள்ளது.

    அவரது பதிவில், "தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் அயோத்தியை பரதர் ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ராமரின் செருப்பை வைத்து பரதர் எப்படி 14 ஆண்டுகள் ஆட்சி செய்தாரோ, அதே போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது.
    • மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    சென்னையை சேர்ந்த வாலிபர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது.

    இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    சிறுவர்களின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது. சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான். குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும் என்று கூறினர்.

    ×