என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கர்நாடகா
- சோதனையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகள் வீடுகள், மற்றும் அவர்களது அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடகாவில் 51 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
பெங்களூரு, பெங்களூரு ஊரகம், சிமோகா, யாதகிரி, தும்கூர், ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையை இன்று அதிகாலை முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
சோதனை நடந்து வரும் அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று லோக் ஆயுக்தா போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- 'தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது'
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் GT ஷாப்பிங் மாலுக்கு 7 நாட்களுக்கு மூடி சீல் வைக்க கர்நாடக அரசு நேற்று [ஜூலை 18] உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் துறையில் 100 சதவீதம் பேர் கன்னடர்கள் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
- கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மசோதா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த மசோதா மீதான கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மசோதாவில் சில குழப்பங்கள் உள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூடடத்தில் இந்த மசோதா குறித்து முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை. அதற்குள் மீடியாக்களில் செய்தி வெளியானது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அதை களைவோம். விரிவான ஆலேசானை நடத்தப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்ததுபோல் கர்நாடக மாநிலத்தில் துக்ளக் அரசு இல்லை. சித்தராமையா அரசு நடக்கிறது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பரிசீலிப்போம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா "சித்தராமையா தனது முதல் எக்ஸ் பதிவில் தனியார் செக்டாரில் 100 சதவீத இடஒதுக்கீடு என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் நிர்வாகப் பிரிவில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத பிரிவில் 70 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கர்நாடகாவில் துக்ளக் ஆட்சி நடப்பதாக தெரிகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.
- இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்பதை கணேஷ் பகிரவில்லை.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தயது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று தங்களுக்கும் நடந்துள்ளதாக ஃபிரிடோ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கணேஷ் சோனாவனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கணேஷ்,"உண்மைக் கதை: ஸ்வப்னில் [ஜெயின்], ஏதர் இணை நிறுவனர் மற்றும் நானும் ஒருமுறை பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று, ஷூஸ்-க்கு பதிலாக செருப்புகளை அணிந்து சென்றதால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டோம்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்பதை கணேஷ் பகிரவில்லை என்றாலும், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிறகு அவர்கள் வேறு உணவகத்திற்குச் சென்றதாகக் கூறினார்.
- நேற்று 2 ஆயிரத்து 731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2 ஆயிரத்து 731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 524 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 270 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
- கேஆர்எஸ் அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் திறப்பு.
- 1700 கன அடி பாசன கால்வாயிலும் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணி நிலவரப்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு செல்லும் காவிரி கால்வாயிலும், 1700 கன அடி பாசன கால்வாயிலும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நுகு அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என்றார்.
- தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நிறுத்தி வைப்பு.
கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.
இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "கர்நாடக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் நாட்களில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்தார் நவீன் குமார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் அவரது கொலைக்கு நீதிகேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தப் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் வழக்கின் தீர்ப்பு தாமதமாவதால் தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மற்ற 3 குற்றவாளிகளும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, அமித் திவேகர், நவீன் குமார், சுரேஷ் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவனான நவீன்குமார், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள GT மாலில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார். மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையே உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கிழித்தெடுத்து வருகின்றனர். மேலும் இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.
- சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மநாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே தனியார் துணை பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சொந்த மண்ணில் கன்னடர்களின் நலன் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பண்பாடு, கலாச்சாரம் போல வேலைவாய்ப்பு விவகாரத்திலும் அரசு கவனம் செலுத்தும். இதன் காரணமாகவே வேலைவாய்ப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
- தனியார் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்.
- தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் எக்ஸ் பதிவை நீக்கிய சித்தராமையா.
கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.
இதற்கிடையே கர்நாடக மாநில தொழில்துறை மந்திரி சந்தோஷ் லாத் "தனியார் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத பதவி (non-management roles) பணிகளில் 70 சதவீதம், நிர்வாகம் தொடர்பான பணிகளில் 50 சதவீத இடங்களும் கன்னட மக்களுக்கு வழங்கப்படும்" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த மசோதா பாரபட்சமானது என தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.
மணிபால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் சேர்மன் மோகன்தாஸ் பாய் "இந்த மசோதா பாகுபாடானது. பாரபட்சமானது. இது விலங்குகள் பண்ணை 'Animal Farm' (the George Orwell novel) போன்ற பாசிச மசோதா" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் "இந்தக் கொள்கையிலிருந்து மிகவும் திறமையான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்க வேணடும். தொழில்நுட்ப மையமான எங்களுக்கு திறமையான பணியாளர்கள் தேவை. உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே நோக்கமாக இருக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத்தில் எங்களின் முன்னணி நிலையை பாதிக்கக்கூடாது" என்றார்.
- எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹார்ன் மற்றும் பேனல் போர்டு டிஸ்பிளே போன்ற பாகங்கள் இயங்காததால் ஷோருமில் புகார் அளித்துள்ளார்.
- பல முறை நினைவூட்டியும் ஷோரூம் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பழுதடைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்து செய்ததற்காக ஓலா நிறுவனத்துக்கு ரூ.1.94 லட்சத்தை வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஆர்.டி.நகரில் வசிக்கும் நிஷாத் என்பவர் 2023 டிசம்பரில், ஓலா ஸ்கூட்டரை வாங்க ஷோரூம் விலையாக ரூ. 1.47 லட்சம் மற்றும் பதிவு மற்றும் பிற கட்டணங்களுக்கு ரூ.16,000 செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் டெலிவரி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹார்ன் மற்றும் பேனல் போர்டு டிஸ்பிளே போன்ற பாகங்கள் இயங்காததால் ஷோருமில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் பல முறை நினைவூட்டியும் ஷோரூம் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நிஷாத், பெங்களூரு, 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 10-ந்தேதி தீர்ப்பளித்தார். அதில் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
அப்போது, புகார்தாரர் செலுத்திய முழுத் தொகையும் செலுத்தப்படும் வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் ரூ.1.62 லட்சத்தைத் திருப்பித் தர வேண்டும். புகார்தாரருக்கு ஏற்பட்ட மன வேதனை மற்றும் சிரமத்திற்கு இழப்பீடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 என மொத்தம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் வழங்க ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்