என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கர்நாடகா
- கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
- கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும்
கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால்
- பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உருவாக்கியவருமான தேவகௌடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.
ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இடையிலேயே பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிக்கியதால் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகே இவை வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் பிரஜ்வல் நாடு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கூடிய கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் எச்.டி.ரேவண்ணா இந்த விவகாரம் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். அங்கு அவர் பேசியதாவது,எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
'கர்நாடக காவல்துறை தலைமை இயக்குனர் அலோக் மோகன் மீதும் ரேவண்ணா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக சில பெண்களை இயக்குநகரகத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்க வைத்து அலோக் மோகன் புகார் அளிக்க வைத்துள்ளார்.அவர் தலைமை இயக்குனராக இருப்பதற்கு தகுதியற்றவர்' என்று சட்டமன்றத்தில் ரேவண்ணா தெரிவித்துள்ளார். ரேவண்ணாவின் பேச்சுக்கு துணை முதலவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் கடனைகளை தெரிவித்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர் பின் ஒருவராக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் உத்தர கன்னடாவில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன.
இதற்கிடையே, உத்தர கன்னடாவில் ஏற்கனவே பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழையால் அங்கு 92 வீடுகள் இடிந்தன. உத்தர கன்னடா மாவட்டத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மீட்புக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அங்கோலா தாலுகா சிரூர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் மண்ணில் புதைந்தனர். தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின.
மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரை மீட்புக்குழு மீட்டது. மாயமான 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
- எந்திரத்தில் சென்சார்கள் மற்றும் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன.
- தானியங்கி எந்திரம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகரில் நடக்கும் சில வினோதமான நிகழ்வுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பெங்களூருவில் ஒரு தானியங்கி பானிப்பூரி விற்பனை எந்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த தனித்துவமான எந்திரம் அப்பகுதியில் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் அமைந்துள்ளது. இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ள ஸ்டாலில் ஒரு ஊழியர் மட்டும் இருக்கிறார். இந்த எந்திரத்தில் சென்சார்கள் மற்றும் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தானியங்கி எந்திரம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
'எச்.எஸ்.ஆர். லேஅவுட் 2050-ல் வாழ்கிறது' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
HSR is living in 2050 @peakbengaluru pic.twitter.com/XzYpxoGWrX
— Benedict (@benedictgershom) July 14, 2024
- தமிழகத்திற்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
- நீரை நாங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நாங்கள் கூடுவதை போல், தமிழ் நாடு கூடுவதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. அவர்களின் கூட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அது அவர்களின் உரிமை. அதுபற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால், இதே நேரம் நேற்று முதல் எங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது."
"காவிரியில் கிட்டத்தட்ட 50,000 அதிக கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்கு இருப்பதை நாங்கள் ஹராங்கி வழியே வெளியேற்றி வருகிறோம். தற்போது வரை ஹராங்கி மற்றும் இதர பகுதிகளில் இருந்து 20,000-க்கும் அதிக கன அடி நீர் திறந்து விடப்படுவதாக நினைக்கிறேன். கடவுள் அனுமதித்தால் நம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்."
"ஆனால், தமிழகத்திற்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் விருப்பம், எங்கள் விருப்பம் மற்றும் நமது விருப்பங்களை தாண்டி நீங்கள் எங்களை அனுமதியுங்கள். நாங்கள் தேக்கி வைத்திருப்பதில் இருந்து மட்டும் தான் நீரை வழங்க முடியும். அந்த நீரை நாங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது. இது அவ்வளவு எளிமையானது."
"கர்நாடக மக்களின் சார்பில் பணிவான கோரிக்கையை விடுக்கிறேன், எங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்குகிறோம்.., என்று தெரிவித்தார்.
- அதிசய குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
- 5 முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட வால் வெளியே வந்தது கண்டறியப்பட்டது.
திருப்பதி:
ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பின் பகுதியில் வால் இருந்தது. அதிசய குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
குழந்தை பிறந்த 3 மாதங்களில் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வால் வளர்ந்தது.
இதனால் குழந்தையின் பெற்றோர் கவலை அடைந்தனர். இதையடுத்து ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷஷாங் பாண்டா குழந்தையை பரிசோதித்தார்.
அப்போது முதுகுத்தண்டில் உள்ள 5 முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட வால் வெளியே வந்தது கண்டறியப்பட்டது.
மருத்துவ அறுவை சிகிச்சை குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் வாலை வெட்டி எடுத்தனர்.
வால், நரம்பு மண்ட லத்துடன் இணைக்கப்பட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது சிக்கலாக இருந்ததாக கூறினர்.
இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த குழந்தை எந்தவித பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை கர்நாடக சட்டசபையில் இன்று முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழுவினர் 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 27.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகாவில் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டது.
- இது தொடர்பாக அருவிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அருவிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மீறி பலரும் அருவிகளில் குளித்து வருகின்றனர். இப்படி தடையை மீறி அருவியில் குளித்தவர்களுக்கு வினோத தண்டனை ஒன்றை வனத்துறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
சிக்மகளூர் நகரில் உள்ள சார்மதி அருவியில் தடையை மீறி பலர் குளித்துள்ளனர். அப்போது அவர்களின் உடைகளை காவல்துறை அதிகாரிகள் எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஆண்கள் தங்கள் ஆடைகளைத் திருப்பித் தருமாறு காவல்துறையினரிடம் கெஞ்சுகின்றனர். சுற்றுலாப் பயணிகளை எச்சரித்த பின்னர் கர்நாடக காவல்துறை அதிகாரிகள் ஆடைகளைத் திருப்பித் தந்தனர்.
- காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 11,500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்திருந்தது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட பிரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் கர்நாடக முடிவு செய்துள்ளது.
மேலும், தினசரி 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஒரு டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
- போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் அருகே முடிகரே பகுதியில் உள்ள சார்மதி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக அருவியை சுற்றி பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அந்த அருவிக்கு சென்று குளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அருவியில் சில வாலிபர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அவர்களின் ஆடைகள் அருவிக்கரையில் இருந்தது. உடனே போலீசார் அந்த உடைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த வாலிபர்கள் அருவியில் இருந்து ஓடி வந்து போலீசாரிடம் தங்கள் ஆடைகளை கேட்டு கெஞ்சினர். ஆனால் அவற்றை உடனடியாக போலீசார் கொடுக்கவில்லை. இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
இதையடுத்து போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரித்து போதிய அறிவுரைகள் வழங்கி, ஆடைகளை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
- காசிலிங்கேஸ்வரா கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
- பூசாரி கோடாரியை எடுத்தவுடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒரு வினோத வழிபாடு இருந்து வருகிறது. அது என்னவென்றால், பக்தர்கள் தங்கள் உடல் பாகங்களில் எங்கேனும் தீராத வலி ஏற்பட்டதாக அறிந்து, அது குணமாக வேண்டி இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
அவர்கள் இதுபற்றி பூசாரி ஜக்கப்பா கட்டாவிடம் கூறுகிறார்கள். அப்போது பூசாரி ஜக்கப்பா கட்டா, அந்த பக்தர்களை படுக்க வைத்து அவர்களது உடலில் எங்கு வலி இருப்பதாக கூறுகிறார்களோ அந்த பாகத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் வெட்டுகிறார். வெட்டியவுடன் அங்கு மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவர்களது தீராத வலி குணமாகி விடுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
தற்போது இதுதொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் வயிற்று வலி சரியாக வேண்டி வந்த ஒரு வாலிபர் தரையில் படுத்து இருக்கிறார். அவரது கைகளையும், கால்களையும் மற்றவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள்.
அப்போது பூசாரி ஜக்கப்பா கட்டா கோடாரியால் அந்த வாலிபரின் வயிற்றில் ஓங்கி 2 முறை வெட்டுகிறார். அவர் முதல் முறை வெட்டுகையில், வயிற்றை கிழித்துக் கொண்டு கோடாரி சற்று உள்ளே செல்கிறது. ரத்தமும் பீறிட்டு வருகிறது. அப்போது அந்த வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். இருப்பினும் அவரது கைகளையும், கால்களையும் 2 பேர் விடாமல் பிடித்துக் கொள்கிறார்கள். பூசாரி கோடாரியை எடுத்தவுடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பதறிப்போயினர். மேலும் இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமர்நாத் ரெட்டியின் கவனத்திற்கும் சென்றது.
உடனே அவர் இதுபற்றி நடவடிக்கை எடுக்க கூறி லோகாபுரா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மூடநம்பிக்கைகளிலேயே நரபலிபோன்று இது ஒரு கொடூரமான மூடநம்பிக்கை என்று கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
- போனில் உள்ள மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் தனது கணவர் பரப்பியுள்ளார்
- மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
கர்நாடகாவில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் இந்த செயலை அறிந்து மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனைதொடர்ந்து பெண்ணின் தாய் தனது கணவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், உறவினரின் பையனை மகள் காதலித்து வந்தது தனது கணவனுக்கு பிடிக்கவில்லை. எனவே அந்த பையனை வீட்டுக்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி, அவனின் செல் போனில் உள்ள மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் தனது கணவர் பரப்பியுள்ளார்.
மேலும் தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதால் இருவருக்குமே காயங்கள் ஏற்பட்டுள்ளது. தனது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த மகள் நேற்று பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்