என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின
- கோபத்தில் ரஜாவத் ஓடிச்சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்தார்
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம்.
இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து வந்த ரஜாவத்தின் அண்டை வீட்டுக்காரர் விமல் அசலா (35). அசலா, அந்நகரின் நிபானியா பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆளுக்கொரு நாய் வளர்த்து வந்தனர். இருவரும் அவரவர் நாய்களுடன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இவர்கள் வழக்கம் போல நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கிருஷ்னா பாக் காலனியில் நடந்து சென்ற போது அவர்களது இரு நாய்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின. இதனை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இதில் கோபமடைந்த ரஜாவத், வேகமாக தான் வசிக்கும் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தார். வந்ததும் முதலில் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்ட ரஜாவத், அசாலா நின்றிருந்த இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் அசலா மற்றும் அங்கிருந்த 27 வயதான ராகுல் வர்மா என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. அங்கு சண்டையின் போது அருகில் நின்றிருந்தவர்களில் 6 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் மிக தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததை அடுத்து கஜ்ரானா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அசலாவும், ராகுல் வர்மாவும் உயிரிழந்ததாக அறிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ரஜாவத், அவருக்கு உதவியதாக அவர் மகன் சுதிர் மற்றும் உறவினர் சுபம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறது.
எந்தவித முன்பகையும் இல்லாதவர்களுக்கிடையே நாய்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மோதல் ஏற்பட்டதும், மோதல் கொலையில் முடிந்து இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது.
- வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆவார். இவர் குவாலியரில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை காண்பிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் டிரோனை இயக்கி உள்ளார்.
குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது. இதுதொடர்பான வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுதொடர்பான அவரது பதிவில், ஆளில்லா விமானம் மூலம் குவாலியரில் நடைபெற்றுள்ள 9 வளர்ச்சி பணிகளை காட்சிப்படுத்தியது மறக்க முடியாத தருணம்.
இந்த திட்டங்கள் குவாலியர் மக்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் சின்னமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு
- கர்நாடக ஊழல் அரசை போன்று மத்திய பிரதேச அரசையும் மக்கள் வெளியேற்றுவார்கள்
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை மேற்கொள்காட்டி காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ''கர்நாடகாவில் ஊழல் பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷனை பயன்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்தில், அதை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. 40 சதவீதம் கமிஷன் அரசை கர்நாடக மக்கள் அப்புறப்படுத்திவிட்டனர். தற்போது மத்திய பிரதேச மக்கள் 50 சதவீத கமிஷன் அரசை வெளியேற்றுவார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதே கருத்தை அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தும், அருண் யாதவும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் நிமேஷ் பதாக் புகார் அளித்துள்ளார். கடிதம் யார் பெயரில் வெளியானதோ, அவர் மீதும் புகார் அளித்துள்ளார்.
சந்யோகிதகஞ்ச் காவல் நிலைய போலீசார் புகார் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 469 (போலி ஆவணம் மூலம் வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பெண்ணின் எடை 49 கிலோ. 15 கிலோ எடை கொண்ட கட்டியை உள்ளே சுமந்து இருந்தார்.
- கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுரை.
மத்தியப் பிரதேசம் மாநிலம் அஷ்டா என்கிற நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் என்கிற மருத்துவமனையை அணுகி மருத்துவர்களிடம் வயிற்று வலி குறித்து கூறியுள்ளார்.
வயிறு மிகவும் வீக்கத்துடன் இருந்ததால் மருத்துவர்கள் பெண்ணுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து பின்னர், கருப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, பெண் மற்றும் அவரது வீட்டாரின் சம்மதத்துடன், சுமார் 12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
பின்னர், அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
அறுவைசிகிச்சை குழுவைச் சேர்ந்த மருத்துவர் அதுல் வியாஸ் கூறுகையில், " பெண்ணின் எடை 49 கிலோ. 15 கிலோ எடை கொண்ட கட்டியை உள்ளே சுமந்து இருந்தார்.
கட்டி மிகப்பெரியதாக இருந்ததால், நோயாளிக்கு உணவு சாப்பிடும் போதும், நடக்கும்போதும் சிரமம் ஏற்படும் என்பதால், மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின் போது குழு மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் ஆபத்தாகிவிடும். கட்டி பல நரம்புகளுடன் இணைந்திருந்ததால், மருத்துவர்கள் நுட்பமாக கையாள வேண்டியிருந்தது. பெண் இப்போது நலமாக உள்ளார்" என்றார்.
மேலும், இது மிகப்பெரிய சாதனை என்று மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதூரியா மற்றும் துணைத் தலைவர் மயங்க்ராஜ் சிங் பதூரியா ஆகியோர் மருத்துவர்களின் முயற்சியைப் பாராட்டினர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.
- போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள்.
போபால்:
வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று இரவு கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் தாசில்தார் வாகனத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள். இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- சிறுமி நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர்
- மைஹார் நகரில் உள்ள அந்த இரு குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன
மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தது மைஹார் நகரம். இங்கு பிரபலமான அன்னை சாரதா தேவி ஆலயம் உள்ளது.
நேற்று மாலை 11-வயது சிறுமி, அன்னை சாரதா கோயிலில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை ரவி சவுத்ரி (31) மற்றும் அதுல் பதோலியா (30) எனும் அக்கோயிலின் ஊழியர்கள் இருவர் வழிமறித்துள்ளனர். பிறகு அருகில் உள்ள காட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் வெறி அடங்காமல் கொடூரமாக தாக்கி உள்ளனர்.
தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். அப்போது, வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவளை கண்டுபிடித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அச்சிறுமியை மீட்டு ரேவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
"கடிபட்ட காயங்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதலால் அவரது உடலே நீல நிறமாக மாறியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சிறுமியை கடுமையான முறையில் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்," என அச்சிறுமிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடத்தல், கூட்டு பலாத்காரம், காயப்படுத்துதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது. தேவைப்பட்டால், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ஏர் ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது" என்று காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கே.பி. வெங்கடேஷ்வர் கூறினார்.
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு குழு, இன்று மைஹார் நகரில் உள்ள அந்த இரு குற்றவாளிகளின் வீடுகளை இடித்தது.
இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"மைஹாரில் நடந்த பலாத்காரம் பற்றிய தகவல் எனக்கு கிடைத்தது. என் இதயம் வலிக்கிறது. நான் வேதனைப்படுகிறேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன். சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
கைது செய்யப்பட்ட கோவில் ஊழியர்கள் இருவரையும் மைஹார் கோவில் நிர்வாகக் குழு உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
- நேற்றுமுன்தினம் சிறுமி காணாமல் போனார்
- காட்டுப்பகுதியில் சிறுமி படுகாயத்துடன் மீட்கப்பட்டார்
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள மைஹார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி அர்காண்டி டவுன்ஷிப். இந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென்று மாயமாகியுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
சிறுமி மாயமானது குறித்து போலீசில் தகவல் தெரிவித்ததுடன், தேடும் பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்றுமாலை அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் அந்த சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், உடல் முழுவதும் கடிக்கப்பட்டுள்ளது. ரத்தம் சொட்டசொட்ட படுகாயத்துடன் காணப்பட்டுள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அவர் வசித்த இடத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வந்தவர்.
இந்த விசயம் காட்டுத்தீயாக பரவ, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ''மைஹாரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைக்கப் பெற்றேன். எனது இதயம் வலியால் நிறைந்துள்ளன. பெரும் மனஉளைச்சல் அடைகிறேன். போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு முறையாக உயர் சிகிச்சை வழங்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். இதில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
- கௌதம புத்தர் ஞானம் அடைந்ததாகச் சொன்ன அதே போதி மரத்துக்குச் சொந்தமானது.
- மரத்தை பாதுகாக்கும் பணிக்காக ஒரு காவலாளிக்கு மாதம் ரூ.26,000 சம்பளம்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சல்மத்பூரில் உயர் தர மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் செலவு செய்து பராமரித்து வருகிறது.
இந்தியாவின் முதல் விவிஐபி மரம் என்று அழைக்கப்படும் பீப்பல் மரம் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும் விதிஷா நகரத்திற்கும் இடையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சாஞ்சி புத்த வளாகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த மரத்தின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் 4 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்தர அழகிய நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மரத்தில் இருந்து ஒரு இலை கூட காய்ந்துவிடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
மரம் அமைந்துள்ள குன்று சாஞ்சி புத்த பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பகுதியும் பௌத்த தளமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த மரம் இங்கு நடப்பட்டது.
இந்த மரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று பார்க்கலாம். அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவினால் அந்நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட மரக்கன்று ஒன்றிலிருந்து பீப்பல் மரம் நடப்பட்டது. இது, கௌதம புத்தர் ஞானம் அடைந்ததாகச் சொன்ன அதே போதி மரத்துக்குச் சொந்தமானது.
இதுகுறித்து, புத்த மத போதகர் சந்திரரதன் கூறுகையில், "புத்தர், போதகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார். பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்ராவால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. இதே மரத்தின் ஒரு பகுதி தான் சாஞ்சி பௌத்த பல்கலைக்கழக நிலத்தில் நடப்பட்டுள்ளது" என்றார்.
இந்த மரம் 15 அடி உயர இரும்பு வலைக்குள் வைக்கப்பட்டுள்ளது. "இந்த புனித மரம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. எந்த பண்டிகை இருந்தாலும் பராமரிப்புக்கு விடுமுறை இல்லை," என்று மரத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர் ராகுல் தம்னோடியா கூறினார்.
மேலும், மரத்தை பாதுகாக்கும் பணிக்காக ஒரு காவலாளிக்கு மாதம் ரூ.26,000 சம்பளம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு பாதுகாவலர்கள் மரத்தின் பாதுகாப்பு கருவியாக இருப்பதால், மாத பாதுகாப்பு செலவு ரூ. 1,04,000 ஆக இருக்கிறது. ஒரு ஆண்டு முழுவதும், மரத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகாரிகள் ரூ. 12.48 லட்சம் செலவிடுகின்றனர்.
அதன் பாசனத்திற்காக, சாஞ்சி நகராட்சி தனி தண்ணீர் டேங்கர் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் வாரந்தோறும் இங்கு வந்து மரத்தை நோய் தாக்காமல் பாதுகாத்து வருகின்றனர்.
- 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார்.
- தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை.
இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கையும் , களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
சம்பவத்தன்று வருவாய் துறை அலுவலகத்துக்கு சென்ற சந்தன்சிங், பத்வாரி கஜேந்திர சிங்கிடம் ரூ. 4.500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். போலீசாரை பார்த்ததும் பத்வாரி கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். எங்கே தான் ஆதாரத்துடன் சிக்கி கொள்வோமோ என பயந்த அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர். அதில் அவர் விழுங்கிய பணம் கூழாகி வெளியில் வந்தது. பின்னர் அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா பச்சோலி என்பவர் 14.12 வினாடிகளில் தலைப்பாகையை ஒருவர் மீது விரைவாக கட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற வடிவிலான தலைப்பாகையை ஆதித்யா பச்சோலி நேர்த்தியாக கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.
தலைப்பாகை அணிவது வட இந்தியாவில் பாரம்பரிய பழக்கத்தில் ஒன்று. குறிப்பாக திருமண விழாக்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளின் போது தலைப்பாகை கட்டுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா பச்சோலி என்பவர் 14.12 வினாடிகளில் தலைப்பாகையை ஒருவர் மீது விரைவாக கட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற வடிவிலான தலைப்பாகையை ஆதித்யா பச்சோலி நேர்த்தியாக கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.
இந்த வீடியோ ஆயிரகணக்கான பார்வைகளை பெற்ற நிலையில் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் தனது பதிவில், கின்னஸ் உலக சாதனை அதன் மதிப்பை இழந்து விட்டது. சமீபகாலமாக அவர்கள் எதையும் அங்கீகரிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த சாதனையை என்னால் முறியடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
- வந்தே பாரத் ரெயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து செய்தியாளர்களுடன் சந்திப்பு.
- வந்தே பாரத் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீ பாதுகாப்பு குறித்த அச்சத்தை ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். இந்த அரை-அதிவேக ரெயில்கள் இந்த முன்பக்கத்தில் சிறந்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி இந்தூருக்கு வந்தார்.
கடந்த 17ம் தேதி, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது தில்லி நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரெயில் பெட்டியின் பேட்டரி பெட்டியில் தீப்பிடித்ததை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி கூறியதாவது:-
வந்தே பாரத் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை. இந்த ரெயில்களில் தீ தடுப்புக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளும் உள்ளன.
போபால்- டெல்லி வந்தே பாரத் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து பேட்டரி பெட்டியில் மட்டும் எரிந்தது. நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டது.
வந்தே பாரத் ரெயில்களின் டிக்கெட் கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், அவற்றில் இருக்கைகள் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன
- நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஜூலை 19 அன்று தொடங்கிய 4-வது ஜி-20 EWG மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சர்களின் சந்திப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகளாவிய பணியாளர்களின் நலத்திற்கான செய்தியாக இந்த சந்திப்பு அமைந்திருப்பதாக நான் நம்புகிறேன். அதிக அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வாய்ந்த பணியாளர்களை உலகிற்கே வழங்கும் நாடாக திகழ இந்தியாவிற்கு தகுதி உள்ளது.
நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது. கடந்த தொழில்நுட்ப புரட்சியின்போது அதிகளவில் வேலைவாய்ப்புகளை இந்தியாதான் உருவாக்கியது. அதனாலேயே இந்த சந்திப்பு இங்கு நடைபெறுவது சிறப்பானது. பல "ஸ்டார்ட் அப்" (start-up) நிறுவனங்கள் இந்தூரில் தொடங்கப்பட்டு வருகிறது.
ஓரிடத்திலேயே தங்கி பணியாற்றாமல், வீட்டிலும் அலுவலகத்திலும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் திறமைகளை வெளிப்டுத்தும் ஒரு பணியமைப்பு உருவாகி விட்டது. இதனை வளர்ப்பதறற்கு ஜி-20 தலைமை தாங்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளுக்காக கல்வித்தகுதி மற்றும் பணித்திறனின் அடிப்படையில் ஒரு உலகளாவிய பட்டியலிடுதலுக்கான உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன. இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் விதத்தில் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
திறன் வளர்த்தல், திறன் மறுசீராய்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் ஆகியவையே நமது மந்திரமாக கொள்ள வேண்டும். இந்தியாவில் திறன் இந்தியா திட்டம் இதற்காகவே கொண்டு வரப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், ஐஓடி மற்றும் டிரோன் தொழில்நுட்பம் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்