என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திறன்வாய்ந்த பணியாளர்களின் தாயகமாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி
- வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன
- நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஜூலை 19 அன்று தொடங்கிய 4-வது ஜி-20 EWG மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சர்களின் சந்திப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகளாவிய பணியாளர்களின் நலத்திற்கான செய்தியாக இந்த சந்திப்பு அமைந்திருப்பதாக நான் நம்புகிறேன். அதிக அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வாய்ந்த பணியாளர்களை உலகிற்கே வழங்கும் நாடாக திகழ இந்தியாவிற்கு தகுதி உள்ளது.
நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது. கடந்த தொழில்நுட்ப புரட்சியின்போது அதிகளவில் வேலைவாய்ப்புகளை இந்தியாதான் உருவாக்கியது. அதனாலேயே இந்த சந்திப்பு இங்கு நடைபெறுவது சிறப்பானது. பல "ஸ்டார்ட் அப்" (start-up) நிறுவனங்கள் இந்தூரில் தொடங்கப்பட்டு வருகிறது.
ஓரிடத்திலேயே தங்கி பணியாற்றாமல், வீட்டிலும் அலுவலகத்திலும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் திறமைகளை வெளிப்டுத்தும் ஒரு பணியமைப்பு உருவாகி விட்டது. இதனை வளர்ப்பதறற்கு ஜி-20 தலைமை தாங்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளுக்காக கல்வித்தகுதி மற்றும் பணித்திறனின் அடிப்படையில் ஒரு உலகளாவிய பட்டியலிடுதலுக்கான உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன. இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் விதத்தில் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
திறன் வளர்த்தல், திறன் மறுசீராய்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் ஆகியவையே நமது மந்திரமாக கொள்ள வேண்டும். இந்தியாவில் திறன் இந்தியா திட்டம் இதற்காகவே கொண்டு வரப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், ஐஓடி மற்றும் டிரோன் தொழில்நுட்பம் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்