search icon
என் மலர்tooltip icon
    • சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் நரேந்திரன்நாயர் விருது வழங்கினார்.
    • சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் வகையில் விருந்தும், விருதும் வழங்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்ற விழா விற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷ னர்கள், உதவி கமிஷ னர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ-சைவ விருந்து வழங்கப்பட்டது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், 

    • ராமநாதபுரம் அருகே கிராமிய கபடி போட்டி நடந்தது.
    • பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் அருகில் உள்ள பால்க்கரை கிராமத்தில் சமூக ஆர்வலர் அலெக்சின் 12-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலெக்சின் வெள்ளி நிலா, காந்தாரி அம்மன் கபடி கழகம், பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது. இதில் முதல் பரிசு

    ரூ. 50 ஆயிரத்தை அலெக்சின் வெள்ளி நிலா பால்க்கரை அணியும், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரத்தை ஆய்க்குட்டி தேசிய பறவை அணியும், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரத்தை சாமிப்பட்டி லவ் பேர்ட்ஸ் அணியும் பெற்றன.

    இதில் ராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் கே.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.மடை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்து முருகன், அ.மு.மு.க. ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், பால்க்கரை கிராமத்தை சேர்ந்த பொறியாளர் சிங்கப்பூர் சிவசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் பாலமுருகன், தங்க நகை தயாரிப்பாளர் சிவக்குமார், ராஜீவ்காந்தி, பால்க்கரை கேங்குராஜ், நவநீதன், முனியப்பா,தினேஷ்,வைசவா,கூரி,ரவி பத்மநாபன்,அஜித்குமார், சசிகுமார், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரம் அருகே கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி பேசினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோவிலாங்குளம், சம்பகுளம், முதல்நாடு, கே.வேப்பங்குளம், குண்டுகுளம், தரைக்குடி ஆகிய பகுதிகளில் கோடை மழை பொய்த்தால் விவசாயிகள் ஆர்வத்துடன் கோடை உழவு பணி செய்கின்றனர். கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி கூறுகையில், கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் மண் இறுக்கம் தளர்ந்து சரியாக நிலைப்படுத்தப்படும். மழைநீர் மண்ணின் உள்ளே ஊடுருவதற்கு ஏதுவாக இருக்கும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மக்காத சருகுகள் மக்கி மண்ணில் அங்கக சத்து மேம்படும். கீழ் மண் மேலே புரட்டி விடப்படுவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், கிருமிகள் போன்றவை சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படுவதால் அழிக்கப்படுகின்றன. மேலும் களைச் செடிகள் களையப்படுவதால் வெயிலில் காய்ந்து பயிரிடும் போது களைகள் குறைவாக இருக்கும். பயிர் பூச்சி,நோய், களை மேலாண்மை செலவுகள் குறைக்கப்படும். இதனால் விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.

    • ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமையேற்று பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வீட்டுமனைபட்டா, முதியோர்உதவித்தொகை, பட்டாபெயர்மாற்றம் உள்ளிட்டகோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன. இதில் கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வனப்பேச்சி அம்மன் கோவில் வருடா பிஷேகத்தை முன்னிட்டு பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவு களாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மறவர் கரிசல்குளம் வில்வ லிங்கத்தின் மாடும், 2-வது பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடும், 3-வது பரிசை ஆப்பனூர் அனுஸ்ரீ, மேலக்கிடாரம் ஜெனிதாவின் மாடும் பெற்றன.

    நடுமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடும், 2-வது பரிசை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மாடும், 3-வது பரிசை பூலாங்கால் காதர்பாட்ஷா மாடும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்தரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத் துறை மாடும், 3-வது பரிசை பூலாங்கால் சிவஞானபு ரம் மந்திரமூர்த்தி மாடும் பெற்றன.

    இந்த பந்தயத்தில் சின்ன மாடு போட்டியில் சக்கரம் இல்லாமல் 2 கிலோமீட்டர் தூரம் வண்டியை ஓட்டி வந்து முதல் பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மதுரை அருகே கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த ராஜகுருவின் மனைவி ராஜலட்சுமி(வயது60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். 

    • அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் தள்ளுவண்டி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    அழகர்கோவில் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. சித்திரை திருவிழா புறப்பாட்டின் போது கள்ளழகருடன் மதுரை சென்று வந்த தற்காலிக தள்ளுவண்டி உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் செயல் அலுவலர் ராமசாமி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், செயல் அலுவலர் கருணாகரன், இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மண்டல ஆய்வாளர் கர்ணன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருமங்கலம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது30). இவரது மனைவி ராணி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது குழந்தை பிறந்து இறந்துவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் 3-வதாக குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உடல் நலக்குறைவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தையின் தாய் ராணி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×