என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நியூசிலாந்து
- 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது.
- ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
வெலிங்டன் :
நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கடந்த திங்கட்கிழமை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அங்குள்ள ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது.
புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அங்குள்ள நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து, மக்கள் பலரும் வீட்டின் மேற்கூரைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும்பாலான இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலியானதாகவும், பலர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த கேப்ரியல் புயல் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3-ல் 1 பங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறினார்.
- நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
- நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
- புயல் வீசக்கூடும் என்பதால் கடற்கரையோர மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டது.
- புயல் எதிரொலியால் நியூசிலாந்தில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக்லாந்து:
நியூசிலாந்தில் கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது. புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஆக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கேப்ரியல் தற்போது ஆக்லாந்திற்கு வடகிழக்கே 200 கி.மீ. தொலைவில் அமர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று ஆக்லாந்து மற்றும் மேல் வடக்கு தீவு முழுவதும் பல பள்ளிகள் மூடப்பட்டன, மேலும் மக்கள் முடிந்தால் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கிழக்கு கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, சில பகுதிகளில் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேப்ரியல் புயல் வட தீவு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பெரும் கடல் சீற்றங்களை ஏற்படுத்துவதால், நியூசிலாந்து அரசு வரலாற்றில் மூன்றாவது முறையாக அங்கு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
- ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது.
- விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி குட்டி தீவு போல் காட்சியளித்தது.
ஆக்லாந்து:
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் பெய்யும் மொத்த மழை அளவில் 15 மணி நேரத்தில் மட்டும் 75 சதவீதம் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அந்நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்லாந்து விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி குட்டி தீவு போல் காட்சியளித்தது. விமான நிலைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மேல்தளத்திற்கு சென்று பணியாற்றுகின்றனர். எஸ்கலேட்டர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டன. இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மீட்பு படையினருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர கால தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக்லாந்தில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆய்வு செய்தார். இதன்பின்பு, அவசரகால படையினருடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'பருவகால மழையால் ஏற்பட்டு உள்ள உயிரிழப்பு அதன் பாதிப்பின் தீவிர தன்மையை எடுத்து காட்டியுள்ளது. தொடர் கனமழைக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவரை காணவில்லை' என்று கூறியுள்ளார்.
- பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.
- நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். இவர், அடுத்த 9 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். பின்னர் பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்ற பிறகு விழாவில் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், " இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு. எதிர்வரும் சவால்களை ஏற்க நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் " என்றார்.
- நியூசிலாந்தில் அக்டோபர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
- உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர் ஜெசிந்தா.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஜெசிந்தா கூட்டம் முடிந்தபின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவிக்காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளார் என தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
- உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார்.
- நியூசிலாந்தில் அக்டோபர் 14-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
வெலிங்டன் :
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 42). இவர்தான் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரும் ஆவார். 37 வயதில் ஜெசிந்தா, அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, பதவிக்காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாவது உலகத்தலைவர் என்ற பெயரைப் பெற்றார்.
இவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும், கிறைஸ்ட் சர்ச் நகர் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவ காலத்திலும், நெருக்கடியான தருணங்களில் நாட்டை வழிநடத்திய தலைவர் ஆவார். இந்த நிலையை அவர் பச்சாதாபமாகக் கையாண்டு, அவர் ஒரு சர்வதேச அடையாளமாக மாறினார். ஆனால் சமீப காலத்தில் நடந்த கருத்துகணிப்புகளில் அவரது செல்வாக்கு மிக மோசமாக குறைந்திருப்பது அம்பலத்துக்கு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நேப்பியர் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கண்களில் வழியத் தயாராக இருந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு தனது பதவி திடீர் ராஜினாமாவை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் எனது 6-வது ஆண்டு பதவிக்காலத்தில் நுழைகிறேன். இந்த ஆண்டுகளில் எல்லாம் நான் எனது முழுமையான அனைத்தையும் தந்துள்ளேன். நான் இந்தப் பிரதமர் பதவிக்கு வந்தது எனது பாக்கியம். ஆனால் இது ஒரு சவாலான பணி ஆகும். நான் தொழிலாளர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து (பிரதமர் பதவி) பிப்ரவரி 7-ந் தேதி விலகுகிறேன். நியூசிலாந்தில் அக்டோபர் 14-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
கோடை விடுமுறை காலத்தில் எனது எதிர்காலம் குறித்து கவனிக்க நேரம் எடுத்துக்கொள்கிறேன். அதுவரை நான் பதவியில் தொடரலாம் என்று நம்பினேன். துரதிர்ஷ்டவசமாக அதை நான் செய்ய வில்லை. அப்படி தொடர்ந்திருந்தால் அது நாட்டுக்கு அவமதிப்பாக அமைந்து விடும். ஆனால் எம்.பி. பதவியில் தொடருவேன். நாட்டை அமைதியான சூழலில் ஒரு பக்கமும், நெருக்கடியான தருணத்தில் மற்றொரு பக்கமும் வழி நடத்த வேண்டியதாயிற்று. பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறாது என்பதற்காக நான் பதவி விலகவில்லை. வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். ஆனால் அந்த சவாலை சந்திப்பதற்கு புதிய தோள்கள் தேவை என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது பதவிக்கால சாதனைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக காலநிலை மாற்ற விவகாரத்தில் அடைந்துள்ள சாதனை, சமுதாய வீட்டு வசதி, குழந்தைகளின் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தான் பெருமைப்படக்கூடிய அளவில் சாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜெசிந்தாவின் பதவி விலகல் முடிவு, நியூசிலாந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.
- நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் பதவி காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.
- நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அவர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியிருப்பதாவது:-
நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி), 7ம் தேதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவி காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
- ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிங்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து டி20 போட்டிக்கான அணி விவரம் வருமாறு:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலென், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளிவர், கான்வே, ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்போன், ஹென்றி ஷிப்லி, சோதி, பிளேர் டிக்னெர்.
- உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்துள்ளது.
- வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
வெல்லிங்டன்:
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும்.
இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.
2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.
- இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
வெலிங்டன்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
சமீபத்தில் நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுளார்.
இந்நிலையில், இந்திய தொடருக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:
டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், பின் ஆலென், டேவன் கான்வே, மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ஹென்றி சிப்லே, மைக்கெல் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி.
- மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
- நியூசிலாந்தை 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற இலக்கை.
வெல்லிங்டன் :
2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்த நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் நிறைவேற்றியது.
ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று அந்த சட்டம் கூறுகிறது. இதன் மூலம் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
அதாவது, நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே புகைபிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த புதிய சட்டம் நாட்டில் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000ல் இருந்து 600 ஆக குறைக்கிறது. மேலும் புகையிலையில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை குறைக்கவும் வழிவகை செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்