search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே  போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு ஆணை பெற்ற விவசாயிபோலீசில் புகார்.
    X

    சிதம்பரம் அருகே போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு ஆணை பெற்ற விவசாயிபோலீசில் புகார்.

    • இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.
    • போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவர்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.இவர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி கோவிலில் பயன்படுத்தப்படும் துறை ரீதியான முத்திரையை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×