என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருமத்தம்பட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா பறிமுதல்
- கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை உள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கருமத்தம்பட்டி :
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருமத்த ம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையம் பகுதியில் கருணாகரன்(36) என்பவரின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை உள்ள குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளர் கருணாகரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
தொடர்ந்து பதுவம்பள்ளி பகுதியில் உள்ள சுந்தரமூர்த்தி(59) என்பவரின் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டதில் 5 கிலோ குட்கா பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதனை தொடர்ந்து உரிமையாளர்களிடம் மேலும் இதனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.