என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 10-ம் ஆண்டு நிறைவு விழா
- 13-ந்தேதி பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.
- 250 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் மீனாட்சி மருத்துவமனை, கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் 10-வது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் இந்த ஆண்டு 10 நாட்கள் கொண்டாட்டத்தை அறிவித்திருக்கிறது. அதன்படி நேற்று முதல் விழா தொடங்கியது. வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் திருநாளன்று மாலையில் மாபெரும் கண்கவர் நிகழ்வோடு நிறைவடையும்.
இது குறித்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் கூறியதாவது:-
"ஒரு ஆண்டுவிழா என்பதையும் கடந்த ஒரு திருவிழா இது. இத்தகைய ஒரு வெற்றிகரமான பயணத்தை சாத்தியமாக்கியிருப்பது எமது மருத்துவமனையை சேர்ந்த அனைத்து பணியாளர்களின் 10 ஆண்டுகால மிகச்சிறப்பான பணி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வே ஆகும். நாங்கள் இவர்கள் அனைவரையும் வரையும் கொண்டாடி, கவுரவித்து மகிழ்கிறோம்.
இந்த கொண்டாட்டங்களின் இறுதி நாளான ஜனவரி 17 அன்று பகல் நேரத்தில் ஒரு "திருவிழா" நிகழ்வும் மற்றும் இரவு நேரத்தில் ஒரு "ஸ்டார் நைட்" நிகழ்வும் சிறப்பாக நடைபெற உள்ளன. பகல் பொழுது முழுவதும் நீடிக்கின்ற திருவிழா கொண்டாட்டத்தில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை விளையாடப்பட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்படும். பார்வையாளர்களை கடந்த காலத்தை நோக்கி இது அழைத்துச் செல்லும்.
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு பொழுதுபோக்கு பூங்காவும் இதற்காக நிறுவப்படும். சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் "ஸ்டார் நைட்" கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன.
இக்கொண்டாட்ட நிகழ்விற்கு அனுமதி இலவசம்.
இக்கொண்டாட்ட நிகழ்வின்போது 10 அறக்கொடை திட்டங்களையும் அறிவித்து உள்ளோம்.
ஜனவரி 10 முதல் 20 வரை 10 நாட்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை பேக்கேஜ் ரூ. 10,000 ஆகும். அதே 10 நாட்களில் பத்து பரிசோதனைகளின் தொகுப்பு ரூ.1000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும். 20 முதல் 30 வரை வெளிநோயாளி பிரிவு சார்ந்த அனைத்து பரிசோதனைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி.
14 அன்று ஒரு நாளுக்கு மட்டும் ரூ.10 என்ற கட்டணத்தில் அனைத்து வெளி நோயாளி பிரிவு மருத்துவ ஆலோசனை (அவசர சிகிச்சை உட்பட) கிடைக்கும். 13-ந் தேதி ஒரு நாளுக்கு மட்டும் ரூ.10 என்ற விலையில் மருத்துவமனையின் உணவகத்தில் மதிய உணவு வழங்கப்படும்.
10 முதல் 20 வரை மருத்துவமனையிலிருந்து 10 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் பிக்அப் மற்றும் டிராப் வசதி வழங்கப்படும். 13-ந்தேதி பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். 10 முதல் 20 வரை குழந்தைகளுக்கு ஓ.பி.டி. பிரிவில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். 10-ம் தேதி – ஒரு நாள் மட்டும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் உள்நோ யாளிக ளுக்கான கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
அடுத்த 10 மாதங்களில் பொதுமக்களில் 10000 நபர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு சிகிச்சை பயிற்சி அளிக்கப்படும்.
தஞ்சாவூரில் பெருநகரங்களுக்கு நிகரான முதன்மையான மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கு மாறு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம். மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சாதனங்களோடு 250 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்