search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைகட்டியில் மான் இறைச்சி வைத்திருந்த 11 பேருக்கு அபராதம்
    X

    ஆனைகட்டியில் மான் இறைச்சி வைத்திருந்த 11 பேருக்கு அபராதம்

    • மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை மீட்டனர்.
    • வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    கோவை :

    கோவை ஆனைகட்டி பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் துவைப்பதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, மான் இறைச்சி சமைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது, முருகன் (வயது 49) என்பவர் துரைசாமி (65) என்பவருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. விசார ணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனைகட்டியைச் சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன்(39) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்படி துவைப்பதியில் இருந்த ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை, கொடுவாள் ஆகியவற்றை மீட்டனர்.

    இதையடுத்து, மானைக் கொன்ற முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் மூங்கில்பள்ளம் அருகே உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அங்குசென்ற வனத்துறையி னர் ரங்கசாமி (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது வளர்ப்பு நாயை விட்டு மான்களை கொன்று இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), கந்தசாமி (40) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மான் இறைச்சிகளை மீட்டனர்.அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    ஆனைகட்டி பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதைத்தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×