என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் 129 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- திண்டுக்கல் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது.
- 129 தீர்மானங்கள் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இதில் பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் வராததால் மன்றம் வெறிச்சோடி காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினராக வரத் தொடங்கினர்.
104 பொது தீர்மானம் மற்றும் 15 சிறப்பு தீர்மானங்கள் என மொத்தம் 129 தீர்மானங்கள் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்பு நிறைவேற்றப்பட்டது.
ஜூலை 1ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒரு முறை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.