search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் ரூ.13 கோடியில் ஹைட்ராலிக் கார் பார்க்கிங் திட்டம்
    X

    குன்னூரில் ரூ.13 கோடியில் ஹைட்ராலிக் கார் பார்க்கிங் திட்டம்

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
    • குன்னூர் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி கூடுதல் பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யாமல் உள்ளதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    குன்னூரில் ரூ.13 கோடியில் ஹைட்ராலிக் கார் பார்க்கிங் திட்டம், 350 வாகனங்கள் நிறுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    குன்னூர் பஸ் நிலை யத்தை விரிவாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முதல் கட்டமாக ரூ.1 கோடியும், 2-வது கட்டமாக ரூபாய் 11.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குன்னூர் பஸ் நிலையம் விரிவாக்கப்பட்டு 26 பேருந்துகள் நின்று செல்ல கட்ட திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஆற்றோரத்தில் எவ்வாறு பஸ் நிலையம் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    மேலும் இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், துறை அதிகாரிகளிடமும் மாவட்ட கலெக்டருடனும் பேசி ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும.

    மேலும் இங்குள்ள தீயணைப்பு துறை அலு வலகத்தையும் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்று ஓரப் பகுதி என்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், துணைத் தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் கோட்டாட்சியர் பூஷண குமார், தாசில்தார் கனிசுந்தரம். பொறுப்பு ஆணையாளர் ஏகராஜ், நகர செயலாளர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×