என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 13.47 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
- தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கள அளவில் 304 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 15 இயன்முறை மருத்துவர்கள், 15 நோய் ஆதரவு செவிலியர்கள், 180 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 78 மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள் தொற்றா நோய்க்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் தொற்றா நோய்களுக்கான தொடர் மருத்துவ சேவைகளை வழங்குகின்றனர்.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது நாள் வரை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 6,259 பேரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5,024 பேரும், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் 4,574 பேரும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6,484 பேரும் பயன்பெற்றுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7,062 பேரும், புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5,763, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4,837, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,908, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 5,249, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4,076, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 4,414, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,832 பேரும் பயன்பெற்றுள்ளனர்.
திருச்செந்தூர் நகராட்சியில் 2,489பேர், கோவில்பட்டி நகராட்சியில் 5,902 பேர், காயல்பட்டிணம் நகராட்சியில் 2,792 பேர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் 14,765 பேர் என 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் பொதுமக்கள் 93 ஆயிரத்து 430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். மேலும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்