search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஜவுளி சந்தையில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு துணி வகைகள் விற்பனை
    X

    ஈரோடு ஜவுளி சந்தையில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு துணி வகைகள் விற்பனை

    • தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.15 கோடிக்கு துணிகள் விற்று தீர்ந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவி த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது பன்னீர்செல்வம் பார்க், தலைமை தபால் நிலையம் எதிர்புறம், அசோ கரம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெற்று வருகிறது.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை களை கட்டியது.

    நேற்று இரவு கூடிய ஜவுளி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்று க்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு துணி களை கொள்முதல் செய்து அள்ளிச் சென்றனர்.

    இதே போல் கேரளா கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநில வியாபாரிகள் இரவு நடந்த ஜவுளி சந்தைக்கு வந்திருந்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜவுளி சந்தை யில் ஏராளமான புதிய துணி வரத்துக்கள் அறி முகப்படுத்த ப்பட்டுள்ளன.

    குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்த ப்பட்டு ள்ளன. இதனால் வியாபாரி கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

    கடந்த 4 நாட்களாக தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. மொத்த வியாபாரத்தை விட சில்லரை வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது.சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.

    இதேபோல் மொத்த வியாபாரம் 30 சதவீதம் நடை பெற்றதாக வியாபாரி கள் தெரிவித்த னர். கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.15 கோடிக்கு துணிகள் விற்று தீர்ந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவி த்தனர்.

    Next Story
    ×