என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
15,16-ந்தேதிகளில் நீதித் துறை பணியாளர் வேலைக்கான எழுத்துத் தேர்வு
- நீதித் துறை பணியாளர் எழுத்துத் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இந்த தேர்வில் 18 ஆயிரத்து 627 பேர் எழுதுகிறார்கள்.
சேலம்:
நீதித் துறை பணியாளர் எழுத்துத் தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.கலைமதி தலைமையில், மாவட்ட கலெக்டர் .கார்மேகம் முன்னிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நீதித் துறை பணியாளர் எழுத்துத் தேர்வு வருகிற 15, 16-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை சேலம் மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில், 18,627 தேர்வர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம், சுகாதார வசதிகள் மற்றும் தேர்வு மையங்களில் கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திடவும், தேர்வு நாளான்று தேர்வு மையம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் தேர்வாளர்களுக்கு வசதியாக அவ்வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி செல்லவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் மையத்தில் தேவையான சக்கர நாற்காலிகள் மற்றும் நடமாடும் வாகனத்தினை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வாளர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வறைக்கு வருகை புரிந்திட வேண்டும் எனவும், தேர்விற்குறிய வழிகாட்டு நெரிமுறைகளில் தெரிவித்துள்ள படி இத்தேர்வினை முழு கவனத்துடன் நடத்திட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீ ஸ் சூப்பிரண்டு அபிநவ், சேலம் வணிக நீதிமன்ற நீதிபதி ஏ.தீபா, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா , வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட தீயணைப்பு துறை, கல்லூரி மற்றும் பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்