என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் கோவை பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை,
தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (என்எம்எம்எஸ்) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி, திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்ேறாரின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஏழாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9, 10 பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படுகிறது.
வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவித்தொகையின் நோக்கமாகும். மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியானதில், தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் கோவை மாவட்டத்தில், மொத்தம் 162 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.