என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை
Byமாலை மலர்24 April 2017 11:06 AM IST (Updated: 25 April 2017 11:29 AM IST)
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-
அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1600 ஏக்கர் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டுக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.
கடந்த 1992-ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டில் தேயிலை, கொய் மலர் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 600 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ஓய்வுக்காக கொடநாடு வந்து செல்வார். அப்போது இங்கிருந்து கொண்டே அரசு நிர்வாகத்தை வழிநடத்தி வந்தார்.
இதற்காககொடநாடு எஸ்டேட்டில் 5 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது. இதில் 93 அறைகள் உள்ளன. மேலும் ஹெலிபேடு வசதி, படகு குழாம் மினி தியேட்டர், கண்ணாடி மாளிகை, எஸ்டேட்டை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியும் உள்ளன. மேலும் பங்களாவை சுற்றி 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
மேலும் சொகுசு பங்களாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு இருந்தது.
ஜெயலலிதா வரும் நேரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அவர் இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் இணைக்கப்பட்டதால் அபராத தொகைக்காக பறிமுதல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கொடநாடு எஸ்டேட்டில் தற்போது வடமாநிலத்தை சேர்ந்த காவலாளிகள் மட்டுமே சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 2 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் எஸ்டேட்டுக்கு வந்தனர்.
அங்கு எஸ்டேட் காவலாளிகள் நேபாளத்தை சேர்ந்த ஓம்கர் , வடமாநிலத்தை சேர்ந்த கிஷன் பகதூர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். திடீரென வாகனங்களில் கும்பல் அதிரடியாக வந்ததால் காவலாளி ஓம்கர், நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
ஆனால் மர்ம கும்பல் ஆவேசத்துடன் காவலாளி ஓம்கரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். உடனே அவரது கை- கால்களை கும்பல் கட்டி போட்டனர். அப்போது மற்றொரு காவலாளி கிஷன் பகதூர், கும்பலை தடுத்தார்.
இதில் கும்பல் தாக்கியதில் காவலாளி ஓம்கர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து வாகனத்தில் வந்த கும்பல் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மற்றும் கோத்தகிரி போலீசார் கொடநாடு எஸ்டேட்டுக்கு விரைந்தனர்.
அங்கு கொலையுண்ட காவலாளி ஓம்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த கிஷன் பகதூரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளியை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நள்ளிரவில் கொடநாடு பங்களாவுக்கு வந்த கும்பல் அ.தி.மு.க. கட்சியின் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள், ஆவணங்களையும் எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் கொலை செய்யப்பட்ட காவலாளி பிணமாக கிடக்கும் காட்சி.
இதற்காககொடநாடு எஸ்டேட்டில் 5 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது. இதில் 93 அறைகள் உள்ளன. மேலும் ஹெலிபேடு வசதி, படகு குழாம் மினி தியேட்டர், கண்ணாடி மாளிகை, எஸ்டேட்டை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதியும் உள்ளன. மேலும் பங்களாவை சுற்றி 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
மேலும் சொகுசு பங்களாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு இருந்தது.
ஜெயலலிதா வரும் நேரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அவர் இல்லாத நேரங்களில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம்.
காவலாளி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்காத வகையில் பங்களா முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் இணைக்கப்பட்டதால் அபராத தொகைக்காக பறிமுதல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கொடநாடு எஸ்டேட்டில் தற்போது வடமாநிலத்தை சேர்ந்த காவலாளிகள் மட்டுமே சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 2 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் எஸ்டேட்டுக்கு வந்தனர்.
அங்கு எஸ்டேட் காவலாளிகள் நேபாளத்தை சேர்ந்த ஓம்கர் , வடமாநிலத்தை சேர்ந்த கிஷன் பகதூர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். திடீரென வாகனங்களில் கும்பல் அதிரடியாக வந்ததால் காவலாளி ஓம்கர், நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
இன்று வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பங்களா முன்பு திரண்டு இருந்த காட்சி.
ஆனால் மர்ம கும்பல் ஆவேசத்துடன் காவலாளி ஓம்கரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். உடனே அவரது கை- கால்களை கும்பல் கட்டி போட்டனர். அப்போது மற்றொரு காவலாளி கிஷன் பகதூர், கும்பலை தடுத்தார்.
இதில் கும்பல் தாக்கியதில் காவலாளி ஓம்கர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து வாகனத்தில் வந்த கும்பல் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மற்றும் கோத்தகிரி போலீசார் கொடநாடு எஸ்டேட்டுக்கு விரைந்தனர்.
அங்கு கொலையுண்ட காவலாளி ஓம்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த கிஷன் பகதூரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளியை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நள்ளிரவில் கொடநாடு பங்களாவுக்கு வந்த கும்பல் அ.தி.மு.க. கட்சியின் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள், ஆவணங்களையும் எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×