search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்- இந்து முன்னணியினர் திடீர் மோதல்
    X

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்- இந்து முன்னணியினர் திடீர் மோதல்

    திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    திருச்சி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தலைமை தாங்கினார்.  சட்டமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் சதீஷ் வர வேற்று பேசினார். மாநில துணை செயலாளர்கள் பிரபாகரன், அரசு, எம்.கே.முருகன், வக்கீல் சுஜா அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, வக்கீல் மாரியப்பன்,  வட்ட செயலாளர்கள் மோகன்பிரபு, ஜெய்னுல் ஆப்தீன், சரவணன்  உள்பட பலர் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். 

    இந்தநிலையில்அரியலூரில்வருகிற 17-ந்தேதி இந்து முன்னணி சார்பில்  நடைபெற உள்ள தமிழக பாதுகாப்பு மாநாடு குறித்து திருச்சி மாவட்ட இந்து முன்னணியினர் வாகனம் மூலம் பிரசாரம் செய்து  வருகின்றனர். அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர்   ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.  

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும்  சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இந்து முன்னணியினரை அங்கிருந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×