என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் சோள கதிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை
Byமாலை மலர்21 Jun 2018 7:35 PM IST (Updated: 21 Jun 2018 7:35 PM IST)
சுரண்டை அருகே இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் சோள கதிர்கள் நாசம் அடைகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் தெற்கு பகுதியில் அதிசயபுரம் பரம்பு உள்ளது. இங்கு பன்றிகள் மற்றும் மர நாய்கள் இரவு நேரத்தில் 50 ஏக்கரில் பயிரிட்டுள்ள சோள தோட்டத்துக்குள் புகுந்து சோள நாத்து மற்றும் பருத்திகளை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
விவசாயிகள் லைட் மற்றும் சீரியல் பல்புகள் கட்டி விடிய விடிய எரிய விட்டாலும், நாய்களை வளர்த்து பாதுகாத்தாலும் பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து சோள நாத்தை நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து விவசாயி வைத்தியலிங்கம் கூறியதாவது:-
விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், நிலம் தரிசாகிவிடக்கூடாது என சோளம் விதைத்தோம். தற்போது பொதி பருவம் வந்துள்ள நிலையில் கூட்டமாக வரும் பன்றிகள் சோள நாத்தினை அழித்து நாசம் செய்கிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பருத்தியை மர நாய் சேதப்படுத்துகின்றன. இது குறித்து வன துறையினரிடம் கூறினால் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலிபோட சொல்கிறார்கள். அது சாத்தியம் இல்லாதது. ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியாக கம்பிவேலி போட்டால் செலவும் அதிகம். சாதாரண கம்பிவேலி போடுவதால் எந்த பலனும் இல்லை.
அரசு சிறிய பரம்பை சுற்றி கம்பி வேலிபோட்டு விட்டால் செலவு குறைவு. நூற்றுக்கணக்கான விவசாய நிலம் பாதுகாக்கப்படும். கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் மீண்டும் நாங்கள் நெல் பயிர் செய்வோம். எனவே அரசு அதற்கான முயற்சியை செய்ய வேண்டும். விலங்குகள் மீது காட்டும் அக்கறையை உணவு உற்பத்தி செய்யும் விவசாயி மீதும் அரசு காட்டவேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×