என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்9 Aug 2018 4:12 PM IST (Updated: 9 Aug 2018 4:12 PM IST)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி ஆகஸ்டு 2018-ம் மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை தேர்வு செய்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 6 முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ பி.இ. (சிவில்), மற்றும் தையல் தெரிந்த பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் எல்.ஐ.சி நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட பணி நாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் (பொறுப்பு) உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story
×