search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே தனியார் கம்பெனி துணை மேலாளர் தற்கொலை
    X

    சேலம் அருகே தனியார் கம்பெனி துணை மேலாளர் தற்கொலை

    சேலம் அருகே தனியார் கம்பெனி துணை மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் சொரிமுத்து. இவரது மகன் ராஜசெல்வ விஜயன் (வயது 30).

    இவர் சேலம் 4 ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். பெரமனூர் நாராயணன் பிள்ளை தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    நேற்று இரவு இவர் பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். இன்று காலை அவருடன் வேலை பார்க்கும் ராதா கிருஷ்ணன் என்பவர் அங்கு வந்து வீட்டு கதவை தட்டினார்.

    கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் மாற்று சாவி மூலம் கதவை திறந்து வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது அங்கு ராஜசெல்வ விஜயன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜசெல்வ விஜயன் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. தற்கொலை செய்த ராஜசெல்வவிஜயனுக்கு நேபல் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள்.

    தற்கொலை செய்த ராஜசெல்வவிஜயன் எழுதிய 6 பக்க கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். இதில் நான் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் மதுரையில் இருந்து மாறுதலாகி சேலம் வந்தேன். மனைவி, குழந்தைகளை பிரிந்து என்னால் வாழமுடியவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன். சிறுவயதில் நான் தந்தையை இழந்தவன். இதனால் எனக்கு அந்த வலி தெரியும். நீ (நேபல்) குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள் என்று எழுதி இருந்தார்.

    Next Story
    ×