search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்க வேண்டும்- யுவராஜா வலியுறுத்தல்
    X

    அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்க வேண்டும்- யுவராஜா வலியுறுத்தல்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குட்கா ஊழலை பொருத்தவரை ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தொடங்கி சட்ட மன்ற உறுப்பினர் வரை பலருக்கு தொடர்பு உள்ளது. முதலமைச்சர் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த வி‌ஷயத்தில் அமைதி காத்து வருகிறார்.

    இன்று தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அடுத்த வாரம் த.மா.கா. இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள எண்ணை நிறுவனங்கள் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.

    மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி. எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

    ஈரோடு பெரும்பள்ளம் ஓடை ஏரி, குளங்கள், கீழ் பவானி வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலந்து வரு கிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×