என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழலை உலகிற்கு அறிமுகம் செய்ததே திமுக தான்- அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்18 Sept 2018 3:52 PM IST
ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். அவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
வேலூர்:
காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.
ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். கசாப்பு கடைக்காரன் காரூன்யம் பேசுவது போல் உள்ளது. ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி தான் கலைக்கப்பட்டது. சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சியும் தி.மு.க. தான்.
தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.
ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. இந்தாண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படுகிறது. வேளண்மை கூட்டுறவு சங்கங்களில் ரசாயன உரத்துடன் இயற்கை உரமும் விற்பனை செய்யப்படுகிறது.
தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.
தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
Next Story
×