search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: 180-க்கும் மேற்பட்டோர் கைது
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: 180-க்கும் மேற்பட்டோர் கைது

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களது கோரிக்கைளை விளக்கும் விதமாக, மக்களை தேடி என்ற போராட்டத்தை கடந்த 10-ந்தேதி முதல் நடத்தி வருகின்றனர்.

    50 சதவீகித பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வேண்டும், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி, இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் இறப்பு சான்றிதழ், பட்டா சாதி சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    11-வது நாளான இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நிர்வாகிகள் விஜயபாஸ்கர், தஞ்சாவூர் பத்மநாபன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×