என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நத்தத்தில் ஏடிஎம் மையத்துக்கு சென்ற பெண்ணிடம் நூதன மோசடி
Byமாலை மலர்14 Jan 2019 4:12 PM IST (Updated: 14 Jan 2019 4:12 PM IST)
நத்தத்தில் ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் இலுப்பைபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது24). இவர் நத்தத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் போட சென்றிருந்தார். அப்போது அங்கு அறிமுகம் இல்லாத வாலிபர் ஒருவர் நான் பணத்தை ஏ.டி.எம்.-ல் போடுகிறேன் என்று சொல்லி அந்த பெண்ணிடம் வாங்கி விட்டார்.
பின்னர் பணத்தை போடுவதுபோல் சைகை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிசென்றுவிட்டார்.
இதுகுறித்து நத்தம் போலீசில் ஈஸ்வரி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர் சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (23) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் அந்த பெண்ணிடமிருந்து ரூ.39ஆயிரத்து 500 மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நத்தம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×