என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்செந்தூர் அருகே தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அய்யப்பன் என்ற நிஜாம் (வயது 39) கூலித் தொழிலாளி. இவருக்கும், சாத்தான்குளத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரியா நெல்லையில் நர்சாக உள்ளார். திருமணம் ஆன 2 ஆண்டுகளில் கணவன்-மனைவி பிரிந்து விட்டனர்.
இந்தநிலையில் அய்யப்பனுக்கு திருச்செந்தூர் அருகே காட்டுமுகதும்பள்ளி அம்பேத்கர்புரம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சரோஜா என்ற பாத்திமா (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. சரோஜாவுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் ரமேஷ் (23). கட்டிட தொழிலாளி.
அய்யப்பன் அடிக்கடி சரோஜாவிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று இதுபோல் அவர் சரோஜாவிடம் தகராறு செய்ததோடு அவரை தாக்கினாராம். இதுபற்றி சரோஜா தனது மகன் ரமேசிடம் கூறினார். இதனால் ரமேசுக்கு அய்யப்பன் மீது கோபம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அய்யப்பன், சரோஜாவை பார்க்க வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் அருகே அரிவாளுடன் பதுங்கி இருந்த ரமேஷ், அய்யப்பனை வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை வலைவீசி தேடி வந்தனர். இதை தொடர்ந்து கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரமேஷ் சரணடைந்தார். இந்நிலையில் கொலைக்கு தூண்டியதாக சரோஜாவை கோவில்பட்டி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று போலீசார் சரோஜாவின் தம்பி சங்கர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதன் விபரம் வருமாறு:-
சரோஜாவுடன் அய்யப்பன் அடிக்கடி தகராறு செய்து அவரை அடித்து தாக்கியுள்ளார். இது குறித்து அய்யப்பனிடம் சங்கர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், சங்கரை தாக்கியுள்ளார். இதையடுத்து தன்னை தாக்கிய அய்யப்பனை கொலை செய்ய சங்கர் திட்டம் தீட்டியுள்ளார். இதனை தனது சகோதரியிடம் கூறினார். இதை தொடர்ந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அய்யப்பனை சரோஜா, அவரது மகன் ரமேஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இந்த கொலையில் சங்கரின் 17 வயது மகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சங்கர் மற்றும் அவரது 17 வயது மகனை நேற்று கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்