search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர ஆயிரம் 3 சக்கர சைக்கிள்
    X

    தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர ஆயிரம் 3 சக்கர சைக்கிள்

    மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தேர்தல் அன்று சிரமமின்றி சென்று வாக்களிக்க ஆயிரம் 3 சக்கர சைக்கிள்கள் வேலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம், பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கலெக்டர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குறைபாடு உள்ள வாக்கு சாவடி மையங்களை சீரமைக்க உத்தரவிட்டனர். மேலும் மாற்று திறனாளிகள், முதியவர்கள் 3 சக்கர சைக்கிள்களில் செல்ல சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தேர்தல் அன்று சிரமமின்றி சென்று வாக்களிக்க ஆயிரம் 3 சக்கர சைக்கிள்கள் இன்று வேலூருக்கு வந்தது.

    இதனை கலெக்டர் ராமன், உதவி கலெக்டர் மெகராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் ஒரு சக்கர நாற்காலி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×