search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரப்பட்டு கிராமத்தில் பிடிபட்ட 12 அடி நீள மலை பாம்பு.
    X
    காரப்பட்டு கிராமத்தில் பிடிபட்ட 12 அடி நீள மலை பாம்பு.

    காரப்பட்டு அருகே 12 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

    காரப்பட்டு அருகே 12 அடி நீளம் கொண்ட மலைபாம்பு ஒன்று பூனையை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்தது. அந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பெருமாள் கோவில் பின்புறம் சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைபாம்பு ஒன்று பூனையை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இது குறித்து பொதுமக்கள் ஊத்தங்கரை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனகாப்பாளர் முனுசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் மாதப்பன், சிலம்பரசன் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் மலை பாம்பை பிடித்தனர். பின்னர் பாம்பை மீட்டு ஊத்தங்கரை தண்ணீர் பந்தல் காப்பு காட்டில் விட்டனர்.
    Next Story
    ×