search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியில் நீடிப்பு

    பவானிசாகர் அணை இன்று காலை நேர நிலவரப்படி 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 452 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணையாகும்.

    இதன் முக்கிய நீராதாரமாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. பின்னர் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருந்தது.

    இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 452 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடியும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2100 கனஅடியும் என மொத்தம் 3400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    Next Story
    ×