search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஏர்வாடி அருகே பா.ஜனதா குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட தி.மு.க. பிரமுகர் கைது

    ஏர்வாடி அருகே பா.ஜனதா குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் முருகன். தி.மு.க. பிரமுகரான இவர் பாரதிய ஜனதா கட்சி பற்றி அவதூறாக பேசி வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுபற்றி களக்காடு ஒன்றிய பா.ஜ. பிரசார அணி ஒன்றிய தலைவரான எல்.என்.எஸ் புரத்தை சேர்ந்த சுதாகர் என்ற மணி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

     

    Next Story
    ×