search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வழிபட்ட
    X
    தா.பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வழிபட்ட

    கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம்

    திருச்சி அருகே செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் செங்குங்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மன் சிலையில் ஊற்றினர். 

    அதனை தொடர்ந்து கோவில் முன்பு கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்யப்பட்ட கூழ், நீர், மோர், பானகம், இளநீர் ஆகியவை படையல் இடப்பட்டது. அப்போது மாரியம்மன், வீரமலையாண்டி, உக்ராண்டி, வண்டிதுரை, சடாமுனி, மதுரைவீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. 

    அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகளிலிருந்து பொதுமக்கள் விடுபடவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. சாமியாடிகள் அருள் வாக்கிற்கு பின்னர் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    மேலும் விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று தா.பேட்டையில் பல்வேறு கோவில்களிலும் தீர்த்தக்குடம், குளுமை பூஜை சிறப்பாக நடைபெற்றது.


    Next Story
    ×