search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்ப்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    X
    கீழ்ப்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    கல்லணை கீழ்ப்பால பணிகள் மும்முரம்

    மேட்டூர் அணை திறக்கப்பட்டதை முன்னிட்டு கல்லணை கீழ்ப்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    பூதலூர்:

    தமிழக காவிரி பாசன பகுதிகளுக்கு இந்திய விடுதலை பெற்றதற்கு பின் முதல் முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

    மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால் நடப்பாண்டு கூடுதலாக சாகுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    காவிரி பாசன பகுதிகளில் உள்ள தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளுக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


    இதற்கிடையே கல்லணை அருகே ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    கல்லணையில் இருந்து 200 மீட்டர்தொலைவில் 400 மீட்டர் நீளமுள்ள அடப்பன்பள்ளம் கீழ்ப் பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. நவீன எந்திரங்கள் மூலம் கான்கிரீட் போடும் பணிகள் கல்லணை கால்வாய் கரைகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்தடைவதற்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிகள் விரைவாகவும், சரியாகவும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. 

    கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் மதகு பாலங்கள் புது வர்ணம் பூசப்பட்டு காட்சி அளித்துக் கொண்டுள்ளன.

    ஷட்டர்கள் சரியாக இயக்குவதை அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர். மேட்டூர் அணையில் நேற்று திறக்கப்பட்ட தண்ணீர் வரும் 27-ம் தேதி இரவு அல்லது 28-ம்தேதி அதிகாலை கல்லணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கல்லணைக்கு மேட்டூர் அணை தண்ணீர் வந்து சேருவதை பொறுத்து கல்லணை திறப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×