search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங்
    X

    மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ "கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங்"

    • 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "கால்டன் சமுத்திரா" நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கேக் தயாரிப்பதற்காக திராட்சை, ஜெரி, பப்பாளி, ஸ்டாபரி, பைனாப்பிள் உள்ளிட்ட பலவகை டிரை புரூட்ஸ் 120கிலோவும், விஸ்கி, பிராந்தி, உட்கா, ஜின், ரம், பக்காடி உள்ளிட்ட மதுபானங்கள் 60லிட்டரும் சேர்க்கப்பட்டது.

    சின்னத்திரை பிரபலங்கள், பிரபல சமையல் கலைஞர்கள், சுற்றுலா விருந்தினர்கள், ஹோட்டல் பணியார்கள் என 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர். பின் அவைகளை 3 பேரல்களில் மூடி வைக்கப்பட்டது. 40நாட்கள் கழித்து ஊரவைக்கப்பட்ட டிரை புரூட்ஸ், மதுபான கலவையை எடுத்து அதில் 240கிலோ கேக் செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×