என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி 3 பேர் பலி
- கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.
கோவை
தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (வயது 43). டிரைவர்.
கோவைக்கு வந்த இவர் சம்பவத்தன்று முதலிபாளையத்தில் உள்ள் கோவை- அவினாநி ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சந்திரபிரகாஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த சந்திர பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் வேலாயுதன்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (40). கூலித் தொழிலாளி. சம்பத்தன்று இவர் எஸ். மேட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள பொள்ளாச்சி- கோவை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் முனீஸ்வரன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முனீஸ்வரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுக்கரை அருகே உள்ள மெட்டான்காட்டை சேர்ந்தவர் காதர் ஷரீப் (56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கோவை- பாலக்காடு ரோட்டில் மரப்பாலம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி காதர் ஷரீப் மீது மோதியது.
விபத்தில் படுயாகம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே காதர் ஷரீப் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்