என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்
- கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
- கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இன்று காலை திடீரென்று ராஜேந்திரன் கூரை வீட்டிலிருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் புகைமண்டலம் தீயாக மாறியது. இந்த தீ அருகாமையிலிருந்த சுப்பராயலு என்பவரின் இரண்டு கூரை வீட்டிலும் பரவி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி எரிந்தததை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவில் வந்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 கூரை வீடும் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.