என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடு திருடிய வழக்கில் 3 வாலிபர்களுக்கு 'சிறை'
- 3 பேரையும் கைது செய்து, ஆட்டை பறிமுதல் செய்தனர்.
- ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
கும்பகோணம்:
சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தனபால்.
இவர் தனது ஆடு ஒன்றை காணவில்லை என சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டை திருடி சென்ற சுந்தரப்பெருமாள் கோவில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திருமேனி மகன் ஸ்ரீதர் (வயது24), அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சந்தோஷ் (21), தாராசுரம் பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மாதவன் மகன் சுபாஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பில் சுபாசுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஸ்ரீதர் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இவர்கள் அபராதம் கட்ட தவறினால் மேலும் 9 மாத சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சுபாஷ் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.