search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலி அருகே சோதனை  காரில் கடத்திய 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் : ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது
    X

    நெய்வேலி அருகே சோதனை காரில் கடத்திய 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் : ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    கடலூர்:

    நெய்வேலி அருகே பொன்னாரி அகரம் சுங்கச்சாவடி அருகே ஊமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது பல மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கார் மற்றும் இரண்டு நபர்களை பிடித்து வந்து ஊமங்கலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சங்கர் ராம் (வயது 34), லக்குமா ராம் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 16 மூட்டைகள் ஹான்ஸ், 12 மூட்டைகள் பான் மசாலா, 12 மூட்டைகள் புகையிலை போன்றவற்றை கொண்டு வந்தது தெரிய வந்தது . மேலும் இதன் எடை சுமார் 350 கிலோ 6 லட்சம் மதிப்பாகும்.

    இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராம், லக்குமா ராம் ஆகியோரை கைது செய்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×