search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி  கெடிலம் ஆற்றில் கழிவுகள் கொட்டிய 5 வாகனங்கள் பறிமுதல்
    X

    பண்ருட்டி கெடிலம் ஆற்றுப்பகுதியில் கழிவுகளை கொட்டிய 5 வாகனங்களை நகராட்சி ஆணையாளர் பானுமதி தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பண்ருட்டி கெடிலம் ஆற்றில் கழிவுகள் கொட்டிய 5 வாகனங்கள் பறிமுதல்

    • மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர்.
    • பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா?

    கடலூர்:

    பண்ருட்டி நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் சேகரமாகும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு பண்ருட்டி நகரில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாகனங்களை வைத்துள்ளனர். இந்த வாக னங்கள் மூலம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு களை அகற்ற அகற்றும் வாகனங்க ளில் எடுத்து சென்று பின்னர் அந்த கழிவுகளை பண்ருட்டி கெடிலம் ஆற்று பகுதி யில் திறந்த வெளியில் கொட்டு கின்றனர்.

    கழிவுகளால் அப்பகுதி யில் துர்நாற்றம் வீசுவ தோடு, சுகாதாரக் சீர்கேடும் ஏற்படு கிறது. இதனால் கழிவுகளை திறந்த வெளி யில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்ப தோடு, அத்துமீறி கொட்டு பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் பானுமதி, நகராட்சி துப்புரவு அலுவலர் முருகேசன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இன்று அதிகாலை பண்ருட்டி கெடிலம் ஆற்றுப் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து வெளியில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 5 வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு முறையான அனுமதி மற்றும் உரிமம் உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×