search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை போராட்டம்
    X

    கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    5 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை போராட்டம்

    • 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவையும் போதிய அளவு வினியோகிப்பதில்லை.
    • காலி குடங்கள் மற்றும் நாமம் இட்ட மண்சட்டி ஏந்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டூர், ஆளக்குடி, புளியந்துறை, மகேந்திரப்பள்ளி, முதலைமேடு ஆகிய ஐந்து ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவையும் போதிய அளவு வினியோகிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்களான காட்டூர் ஊராட்சி தலைவர் வடிவேல், மகேந்திரப்பள்ளி இளவரசிசிவபாலன், முதலைமேடு நெப்போலியன், அளக்குடி சாந்தினி, புளியந்துறை நேதாஜி மற்றும் அளக்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவபாலன், 5 ஊராட்சி துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் கையில் காலி குடங்கள் மற்றும் நாமம் இட்ட மண்சட்டி ஏந்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக தினமும் தண்ணீர் வழங்க கோரியும், மின் தட்டுப்பாட்டை போக்க கோரியும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×