search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் சிக்கினர்
    X

    சுரண்டையில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் சிக்கினர்

    • சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று மாலை அவரது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது 5 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அப்போது அதில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. சுமார் 650 கிராம் எடை கொண்ட அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 5 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து ச்சென்று நடத்திய விசாரணை யில், சுரண்டையை சேர்ந்த மாரிசெல்வம்(24), கவுதம்(23), தங்கராஜ்(28), கோகுல்(20), காளிராஜ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×