search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    52-ம் ஆண்டு தொடக்கவிழா :திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    எம்.ஜி.ஆர் சிலை மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள்.

    52-ம் ஆண்டு தொடக்கவிழா :திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மேலும் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்ேமாகன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர் இைளஞரணி செயலாளர் வி.டி.ராஜன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் திவான்பாட்சா, நிர்வாகிகள் நைனார்முகமது, வெங்கிடு, மகளிர்அணி செயலாளர் ஜெயலட்சுமி, வக்கீல் பிரிவு செயலாளர் ெஜயபால், அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் பிரபுராம், லெனின், கவுன்சிலர் பாஸ்கரன், வக்கீல் பழனிச்சாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் நாராயணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×