search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லம் தேடிக்கல்வி திட்டம் மூலம்  59 ஆயிரம் மாணவர்கள் பயன் - கலெக்டர் தகவல்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லம் தேடிக்கல்வி திட்டம் மூலம் 59 ஆயிரம் மாணவர்கள் பயன் - கலெக்டர் தகவல்

    • முதல்-அமைச்சரால் இல்லம் தேடி கல்வி திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் கட்டமாக 1,526 மையங்களில் தொடங்கப்பட்டது.
    • இத்திட்டம் தொடர்பாக பல்வேறு கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு நடத்தப் பட்டு, பல்வேறு புத்தக கண்காட்சிகளில் அரங்கம் அமைத்து திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகள் மற்றும் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு முதல்-அமைச்சரால் இல்லம் தேடி கல்வி திட்டம் 27-10-2021 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட் டத்தில் இத்திட்டம் குறித்து கலெக்டர் செந்தில் ராஜ் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரால் இல்லம் தேடி கல்வி திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் கட்டமாக 1,526 மையங்களில் தொடங் கப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், தொடக்க நிலையில் 1,442 மையங்களும், உயர் தொடக்க நிலையில் 1,338 மையங்களும் ஆக மொத்தம் 2,780 மையங்களில் 2780 தன்னார்வலர்கள் மூலம், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 59,896 மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

    இல்லம் தேடி கல்வி மூலம் மாணவர்கள் உற்சாகத்துடனும், புதிய உத்வேகத்துடனும் கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்று பயன்பெறுகின்றனர். மாணவர்களின் வீடு களுக்கு அருகிலேயே தன்னார்வலர்கள் மூலம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதால் மாணவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி கலந்து கொள்கின்றனர்.

    இத்திட்டத்திற்காக தன்னார்வலர்களின் விவரங்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்யப் பட்டு, இணையவழி தேர்வு எழுதி மாநில தேர்ச்சி பட்டியலின் அடிப்படையில் அவரவர் குடியிருப்பு பகுதிகளின் அருகில் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பாடத்திட்டம் தொடர்பாக உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டம் தொடர்பாக பல்வேறு கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு நடத்தப் பட்டு, பல்வேறு புத்தக கண்காட்சிகளில் அரங்கம் அமைத்து திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி புத்தக திருவிழா வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் எண்ணும் எழுத்தும் அரங்கம், இல்லம் தேடி கல்வி அரங்கம் ஏற்படுத்தப்பட்டது.

    இல்லம் தேடி கல்வி அரங்கினை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வை யிட்டு கற்றல், கற்பித்தல் உபகரணங்களின் செயல்பாடுகளை பற்றி அறிந்து கொண்டனர். மேலும் அரங்கில் உள்ள படைப்புகள் குறித்த வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர். மேலும் இத்தனார்வலர்களுக்கு ரூ.1000 மதிப்பில் போட்டித்தேர்வு, உயர்படிப்பு, இல்லம் தேடி கல்வி குழந்தைகளுக்கான சிந்தனையை தூண்டும் புத்தகங்களை வாங்கவும் அனுமதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×