என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில் 5 ஜி சேவை தொடக்கம்
- 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்,
தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் மக்கள் விரைவான 5 ஜி சேவையை பெற முடியும்.
தற்போது 4 ஜி சேவை நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் 5 ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 ஜி நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி காணும் எனவும் கணக்கிடப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 5 ஜி சேவைகள் தொடங்க ப்பட்டன.
தமிழகத்தை பொறுத்த மட்டில் சென்னையில் ஜியோ, ஏர்டெல் சார்பில் 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் மேலும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5 ஜி சேவையை செயல்படுத்த ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.40,446 கோடி முதலீடு திட்டம் உள்ள நிலையில் 6 நகரங்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.