search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 75 சதவீத காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டது- கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    நீலகிரியில் 75 சதவீத காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டது- கலெக்டர் அம்ரித் தகவல்

    • டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
    • வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் 75 சதவீத காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி பாட்டில்களை பொது இடங்களில் வீசிவிட்டு செல்வதை தவிா்க்க காலி மதுபான பாட்டில்களை சேகரிக்கும் மையம் 15 இடங்களில் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் கடந்த மே 15-ந் தேதி முதல் விற்பனை செய்யப்படும் மதுபான புட்டிகளின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    காலி பாட்டில்களை எந்தவொரு மதுபான கடையிலும் கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களில் 75 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×