என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழா
- புத்தகத் திருவிழா வருகிற 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது
- சுமாா் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகத் திருவிழா வருகிற 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா வருகிற 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிகளில் கலைஞா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனா்.புத்தகத் திருவிழாவில் உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. மாணவா்கள், பொதுமக்களின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக இலவசமாக நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.