என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் - நுகர்வோர் பேரவை கோரிக்கை
- திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
- வடிகால் கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே உடனடியாக அவற்றை சரி செய்து சுகாதாரத்தை பேண வேண்டும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணியிடம் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் நகராட்சி யாக தரம் உயர்த்த ப்பட்டு ள்ளது. மேலும் கோவில் நகர மாக இருப்பதாலும் குழந்தைகள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதி யாக சிறப்பு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா அமைத்து அதில் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் நடை பயிற்சி செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும், நகராட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுக ளிலும் குடிநீர் வரும் நேரத்தை கரும்பலகை வைத்து அதன் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும், திருச்செந்தூர் மேல்பகுதியில் தோப்பூரில் இருந்து ஜீவா நகர் வரை செல்லும் ஆவுடையார் குளம் வடிநீர் கால்வாயில் கழிவுநீர் கலக்கப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் வருகிறது.
அந்த பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செ ந்தூர் நகராட்சி அலுவலகம் ஆகியவைகள் உள்ளன. இதனால் வடிகால் கால்வா யில் கொ சுக்கள் உற்பத்தியாகி கொசு தொ ல்லை மற்றும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வரு கிறது. எனவே உடன டியாக அவற்றை சரி செய்து சுகா தாரத்தை பேண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.